பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

605

இருந்து நல்ல நிர்வாகி, மக்கள் சேவகர் என்கிற புகழைப் பெற்றவர் பெரியண்ணன் என்பதை அனைவரும் அறிவார்கள்.

புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் என்பது மாத்திரம் அல்ல, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எல்லாக் கட்சிக்காரர்களுடைய அன்பையும் அரவணைப்பையும் பெற்று எல்லோருக்கும் உதவுகின்ற மனப்பான்மையோடு தன்னை வளர்த்துக் கொண்டவர், இயக்கத்தை வளர்த்தவர், அவர்.

முதலில் தமிழகத்திலே ஒன்று, இரண்டு மாவட்டங்கள் புதிதாக அமைந்த நேரத்தில் புதுக்கோட்டையையும் தனி மாவட்டமாக ஆக்க வேண்டுமென்று குரல் எழுப்பிய அவர், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதல் முதலாக புதுக் கோட்டையை தனி மாவட்டமாக ஆக்குவதற்கு முயற்சி எடுத்து அதிலே வெற்றி பெற்றவர்.

இன்னும் சொல்லவேண்டுமானால், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அங்கே ஒரு கட்டிடம் தேவை யாயிற்றே என்று எண்ணியபோது அருமை நண்பர் மறைந்த அன்பில் தர்மலிங்கம் அவர்களும், பெரியண்ணன் அவர்களும் முன்னின்று புதுக்கோட்டை மன்னருடைய மாளிகையையே மாவட்ட ஆட்சித் தலைவர், அலுவலகம் என்கின்ற அளவுக்கு அன்று ஆக்கித்தந்த அந்தப் பெருமைக்குரியவர்களில் பெரியண்ணனும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

அவர் இந்த இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டின் காரணமாக 1995-ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளின்போது அறிஞர் அண்ணா விருதினை தலைமைக் கழகம் அவருக்கு அளித்து மகிழ்ந்த நிகழ்ச்சி எல்லாம் உண்டு. அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய, நேர்மையான, நாணயமான, அழுத்தந்திருத்த மான, திடமான, உறுதி வாய்ந்த நெஞ்சம் பெரியண்ணனை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

கொண்ட

இங்கே நம்முடைய திரு. திருநாவுக்கரசு அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் வேறு வழியில்லாமல் ஒரு காலை எடுக்க நேரிட்டது. நான் அதைப் பற்றிக்கூட அவருடைய படத்திறப்பு விழாவில் பேசும்போது சொன்னேன். பெரியண்ணன் ஒரு காலை