606
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இழந்தார். ஆனால் நான் ஒரு கையை இழந்து நிற்கின்றேன் என்று அன்றைக்குக் குறிப்பிட்டேன். அந்த நிலை என் நெஞ்சத்திலே ஏற்படுத்தியுள்ள அந்தப் புண்ணை, அந்த வடுவை இன்றைக்கும் மாற்றுவதற்கு இயலாத நிலையில் நான் நின்று கொண்டிருக்கின்றேன்.
இந்த அவையிலுள்ள நம்முடைய அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும், மற்ற கட்சிகளுடைய தலைவர்களும் ஆற்றியிருக்கின்ற இரங்கல் உரையில் என்னுடைய உரையையும் இணைத்துக் கொண்டு அவரை இழந்து தவிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோழர்களுக்கு மாத்திரம் அல்ல, கட்சிக்கு சார்பற்ற முறையில் எல்லா நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கின்ற இந்த அவையின் தீர்மானத்தோடு நானும் பங்குகொண்டு அவருடைய குடும்பத்தாருக்கு அவருடைய மனைவி, மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் வழங்கி இந்த அளவில் அமைகின்றேன். வணக்கம்.