பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நேரத்தில் கொள்கையை நிலைநாட்டுவதிலே வல்லவராக விளங்கியவர்.

அவர், தனக்குத் தரப்பட்ட பொறுப்புகளை ஏற்று ஆர்வத்தோடு நிறைவேற்றினார் என்பதற்கு அடையாளமாகத் தான், அவருடைய மறைவுகூட அமைந்துவிட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. அனைவரும் இங்கே சுட்டிக்காட்டியதற்கொப்ப, தமிழகத்திலே விரும்பத்தகாத அளவுக்கு நடைபெற்ற ஜாதி விரோதக் கலவரங்களை நேரிலே சென்று சமாதானப்படுத்தி, அமைதிப்படுத்துவதற்காக, அவர் அந்தப் பொறுப்பினை ஏற்று, அந்த மாவட்டங்களிலே சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் நம்மைவிட்டு அவர் மறைய நேரிட்டது.

இவ்வளவு விரைவில் அவர் நம்மைவிட்டுப் பிரிவார் என்று யாருமே எதிர்பார்த்ததில்லை. இனிய பண்புகளுக்குச் சொந்தக்காரர்; அவர் பெரிய குடும்பம் ஒன்றிலே பிறந்தவர்; செல்வச் சீர்மிக்கக் குடும்பத்திலே பிறந்தவர் என்றாலும்கூட, ஏழைகளின் தோழனாகத்தான் அவர் இறுதிநாள்வரை வாழ்ந்தார் என்பதை எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இங்கே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். அத்தகையவரை இழந்து தவிக்கின்ற அவருடைய குடும்பத்தாருக்கு நான் இந்த அவையின் சார்பிலும், என் சார்பிலும், என்னுடைய ஆழ்ந்த துயரத்தை, இரங்கலை வெளிப்படுத்திக்கொள்கின்றேன்

இன்று தங்களால் தங்களால் எடுத்துவைக்கப்பட்ட இரங்கல் குறிப்புகள் மற்றும் இரங்கல் தீர்மானம் இவற்றில், அன்னை தெரசா அவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அதைப்போல, பதினொரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நம்மைவிட்டு மறைந்தது பற்றியும் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். இவர்களிலே, குறிப்பாக அன்னை தெரசா பற்றி, மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த பி. சி. ராய் அவர்கள், அவருடைய பிறந்த நாளின்போது சுட்டிக்காட்டிய ஒரேயொரு வாசகத்தை மட்டும் இங்கே நான் எடுத்துக்காட்டுகின்றேன். பி. சி. ராய் சொல்கிறார், தன்னுடைய பிறந்த நாளின்போது - “இந்தப்