60
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
straight answer to my objection. I do not want any vacillation on this இப்போது, மகாதேவன் எனக்கு வேண்டியவர் என்று சொன்னது... (திரு. வெ. கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சில தி.மு.க. உறுப்பினர்கள் குறுக்கீடு) கருணாநிதியைவிட நீங்கள் எல்லாம் கெட்டிக்காரர்கள் அல்ல. அவருக்கு என்ன பேசுகிறோம், என்ன பதில் சொல்ல வேண்டும் என்பது நன்றாகத் தெரியும் அவரைத்தான் நான் கேட்கிறேன். 'வேண்டியவர்' என்று சொன்னதிலே 'இம்ப்ராப்பர் மோட்டிவ்' இல்லையா என்று கேட்கிறேன், The Hon. Member Sri. M. Karunanidhi, will take care of himslef.
கலைஞர் மு. கருணாநிதி : வேண்டியவர் என்ற காரணம் கற்பிக்கப்பட்டு அது அமைச்சர் அவர்களுக்குக் களங்கத்தைக் கொண்டு வந்து சேர்க்குமே என்ற காரணத்தால் ஏன் அந்தப் பொறுப்பு மாற்றப்பட்டது என்று கேட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
THE HON. SRI R. VENKATARAMAN : It goes further. I want to know whether the hon. Member, Sri Karunanithi, honestly, sincerely and personally thinks that there is somthing improper. . . .
கலைஞர் மு. கருணாநிதி : அவர் இருப்பதால் வேண்டியவர் என்று கருதினேன். அவர் வேண்டியவர் அல்ல என்று அமைச்சர் அவர்கள் கூறுவார்களேயானால் நான் நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
THE HON SRI. R. VENKATARAMAN : This is not proper. கலைஞர் மு. கருணாநிதி : வேறு உள்நோக்கத்தோடு சொல்லவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று கோடி ரூபாய்க்கு மெஷினரி வாங்குவதிலே உள் நாட்டிலே வாங்கியது போக மிச்சத்தை ஜப்பான் நாட்டிலே வாங்கவேண்டும். ...
MAX (There was noise in the House.)