612
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
பிரிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புகூட dictate செய்து, இரண்டு, மூன்று கட்டுரைகள் அந்தப் பத்திரிகையில் வெளிவருவதற்கு உதவி, அதற்குப் பிறகுதான் அவர் மரணப் படுக்கைக்குச் சென்றார், மரணமுற்றார் என்ற செய்தியை யெல்லாம் கேள்விப்படும்போது, 89 வயது வரையிலே, ஏறத்தாழ 70 ஆண்டுக்காலம் பொது வாழ்க்கைக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்ட அந்தப் பெருமகனார், இந்தியாவினுடைய புரட்சியிலே தனக்கும் ஓர் அத்தியாயம் உண்டு என்கின்ற அளவிற்கு இடம்பெற்ற அந்தச் சீரிய செம்மலினுடைய மறைவு இந்தியாவிலே உள்ள ஒவ்வொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மாத்திரமல்ல, முற்போக்குச் சிந்தனை உள்ள அனைவருக்கும் பேரிழப்பாகும். அதேநேரத்திலே நாணயமான அரசியல், நேர்மையான அரசியல் வேண்டும் என்று விரும்புகின்ற அத்தனை பேருக்கும் திரு. ஈ.எம்.எஸ். அவர்களுடைய இழப்பு ஒரு பெரும் இழப்பு ஆகும் என்றே நான் சொல்கிறேன்.
ரு
அவர், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் என்று அழைக்கப் பட்டாலும்கூட, நம்பூதிரி என்பது ஒரு சாதிப் பெயர். அந்தச் சாதிப் பெயரே தன்னுடைய பெயராக ஆகின்ற அளவிற்கு அதிலேயும் ஒரு புரட்சியை அவர் செய்துகாட்டி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
தந்தைப் பெரியார் அவர்கள் வைக்கத்திலே - நடத்திய - போராட்டம், நம்பூதிரிகளை நம்பூதிரிகளை எதிர்த்துத்தான் அந்தப் போராட்டத்தை நடத்தினார். அவ்வளவு பிற்போக்கானவர்கள் அங்கே நம்பூதிரிகள் என்ற பெயரில் இருந்தார்கள். அந்தச் சமுதாயத்திலே ஒரு புரட்சியாளர் மின்னல் கீற்றுப்போலத் தோன்றி, சிவப்பு நட்சத்திரமாக இந்தியா முழுவதும் விளங்கி, ஏன் உலக அரங்கிலே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் எல்லாம் பாராட்டுகின்ற அளவிற்கு விளங்கி, அந்த நட்சத்திரம் இன்றைக்கு உதிர்ந்துவிட்டது என்றாலும்கூட, நம்முடைய உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்ட நட்சத்திரமாக அவர் விளங்குகிறார் என்று கூறி அவருடைய இழப்பிற்காக ஆழ்ந்த இரங்கலை இந்தஅவையின் சார்பாக அவருடைய குடும்பத்தாருக்கும் அவருடைய கட்சித் தோழர்களுக்கும் தெரிவித்து அமைகின்றேன்.