பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

615

குறிப்புகள், அவருடைய

வேறு அவை சாராத வேறு குடும்பத்தைப் பற்றி, நிதியுதவி போன்ற கோரிக்கைகளை எழுப்பினால், ஆண்டி அம்பலம் என்ற ஒரு பெரியவருடைய மறைவு, மறைந்துபோய், திசை திருப்பப்பட்டு, வேறு திசையிலே சென்றுவிடும் என்கின்ற ஆதங்கம் எனக்கு உண்டு. எனவே இந்த மாமன்றத்திலே பணியாற்றுகின்ற உறுப்பினர் களுடைய மறைவு, அதன் காரணமாக எழுகின்ற சூழ்நிலை. இவற்றைப் பற்றியெல்லாம் பேச, முடிவுகளை எடுக்க, மாநில சட்டமன்ற மானியம் வருகின்ற நேரத்தில் பொதுவாக அதைப் பற்றி பேசலாம். என்ற கருத்தை மாத்திரம் சொல்லி இல்லையேல். பலரும் எடுத்துச்சொன்ன கருத்தை நான் அலட்சியப்படுத்திவிட்டேனோ என்று யாரும் கருதக்கூடாது என்பதற்காக, இன்றைக்கு ஒரே தீர்மானம் -- ஆண்டி அம்பலம் அவர்களுடைய மறைவுக்காக நிறைவேற்றிய அனுதாபத் தீர்மானம் என்ற வகையிலே, என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தாருக்கு. உற்றார், உறவினருக்கு அந்தத் தொகுதி மக்களுக்கு, அவர் சார்ந்த இயக்கமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, அதன் தலைவருக்குத் தெரிவித்து அமைகிறேன்.