கலைஞரின் சட்டமன்ற உரைகள்
617
அண்மையிலேதான், கடந்த மாதத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீகினுடைய பொன் விழாவைக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டு, அவர் எண்ணியவாறு மிகச் சிறப்பாக அந்த விழாவைக் கொண்டாடினார். 1947 அல்லது 1949ஆம் ஆண்டில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, தமிழகத்திலே, காயிதே மில்லத் அவர்களுடைய தலைமையிலே உருவான அந்தக் காலகட்டத்தில், இன்றைய இராஜாஜி மண்டபத்திலேதான், அதன் முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது என்பதற்காக, இந்தப் பொன் விழாவையும், அதே இராஜாஜி மண்டபத்திலே நடத்த வேண்டுமென்ற ஆசையை என்னிடத்திலே வெளியிட்டு, அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் அரசின் சார்பாக என்று அவர் வலியுறுத்தியபோது, நான் அதிலே சட்டதிட்டங்கள் எதையும் பார்க்காமல், ஒரு மாபெரும் அரசியல் கட்சி, காயிதே மில்லத் தலைமையிலே வந்த அரசியல் கட்சி, அதனுடைய பொன் விழா என்கிற அந்த அளவில் விழா என்ற நிலையிலே நடத்திக்கொள்வதற்கு அவர்களுக்கு வசதிகளையும், வாய்ப்புகளையும் செய்து தந்தேன்.
பேராசிரியர் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொன் விழா நடத்தி முடிந்த பிறகு, இதயக் கோளாறின் காரணமாக மருத்துவமனையில் அவர் விளைந்து, நாங்கள் எல்லோரும் அவரைச் சென்று பார்த்தபோது எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தார் என்பதையும் எண்ணிப் பார்க்கின்றேன். சில நாட்களுக்கு முன் திடீரென்று அவருடைய மூளை நரம்பு வெடித்து, பேசுவதற்கான சக்தியை இழந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, கவலைக்கு இடமான சூழ்நிலையில் அவர் இருப்பதை அறிந்து, அன்று காலையிலே மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தோம். அப்போது அவர் இவ்வளவு விரைவிலே எங்களைவிட்டுப் பிரிவார் என்று யாரும் எண்ணிடவில்லை. பிரிந்துவிட்டார் என்றாலும்கூட, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே எடுத்துக் சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து, சிகிச்சைக்கு நல்ல பயன் காட்டியதைப்போல, நல்ல மனம் படைத்தவராய், எதிரிகளாக கட்சிகளின் சார்பிலே இருந்தவர்களைக்கூட நண்பர்களாகக் கருதக்கூடியவராய், எந்தவகையிலும் தமிழகத்திலே மத வேறுபாடுகளால் எத்தகைய சிறு கிளர்ச்சிகூட விளையக்கூடாது என்று எண்ணுகின்ற உள்ளம் படைத்தவராய்த் திகழ்ந்த அவரை,