பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இன்று பிரிந்திருப்பது, அனைவருக்கும் பெரும் இழப்பாகும். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு என்று கருத முடியாமல், அனைவருக்கும் பேரிழப்பாகும். எவ்வளவு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும்கூட, காண்கிற நேரத்திலே அவற்றை யெல்லாம் ஓர் ஓரத்திலே ஒதுக்கி வைத்துவிட்டு, புன்னகை ததும்ப அவர் பேசுவதும், பழகுவதும் என்றைக்கும் மறக்க முடியாதவை ஆகும்.

இன்றுகூட காலையிலே, நானும் பேராசிரியரும், அமைச்சர் பெருமக்களும் சென்று அவருக்கு மரியாதை செலுத்துகிறபோதுகூட, “உறங்குவது போலும் சாக்காடு” என்று சொன்ன வள்ளுவருடைய குறள்தான் என் நினைவுக்கு வந்தது. அப்படித் தூங்குகிற நிலையிலேதான்' அவர் இயற்கையெய்திய அந்தக் காட்சியைத்தான் நான் இன்றைக்குக் காண நேர்ந்தது. அந்தப் பெரியவருடைய எண்ணம் நிறைவேற, அவருடைய அடியொற்றி அனைவரும் பாடுபட வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் இரங்கல் என்று கூறி, இந்த அரசின் சார்பாக அவருடைய குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர்க்கும், இயக்க நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அமைகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், திரு. அப்துல் லத்தீப் அவர்களும் சொன்ன கருத்துக்களையொட்டி, அவையிலே இருக்கின்ற எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டுமென்று விரும்பினார்கள். காலத்தின் அருமை கருதி, எல்லோரின் சார்பிலே இவர்கள் பேசிவிட்டார்கள் என்று சொல்லி, இவர்கள் தெரிவித்த இரங்கலோடு என்னுடைய இரங்கலையும் பேரவையின் சார்பில் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். அவருடைய கட்சியின் பொன் விழா நடந்த நேரத்தில், பலமுறை தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு, சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று சொன்னார்கள். முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப்போல, இவ்வளவு விரைவிலே அவர் மறைந்து விடுவார் என்று யாருக்கும் தெரியாது.