பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

894.8115 JAM

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

ANNA CENTENAR

CHENNAI - 500

0140

61

MR. DEPUTY SPEAKER : When an hon. Member is speaking, other hon. Members should keep silence.

கலைஞர் மு. கருணாநிதி : அப்படி ஜப்பான் நாட்டிலே சென்று வாங்குவதற்கு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீசரை அனுப்பியதற்குப் பதிலாக அவருடன் ஒரு எஞ்சினியரை அனுப்பி இருக்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு அதிகாரி எதற்காக அனுப்பப்பட வேண்டும் என்கின்ற சந்தேகத்தை எழுப்புகின்ற பிரச்சினையாக அது அமைகின்ற காரணத்தினால் இதைப்பற்றி அமைச்சர்கள் சரியாக நடந்துகொள்ள தவறியிருக்கிறார்கள் என்பதைத்தான் குறிப்பிட விரும்புகிறேன். இந்த மெஷினரிகள் வாங்குகின்ற நேரத்தில் கிடைக்கவேண்டிய 'உள் கமிஷன்' இந்த ஸ்ப்பின்னிங் மில்களுக்கு சேர்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.

MR. DEPUTY SPEAKER : If the hon. Member is making a definite allegation, he should make hold to say that it

is so otherwise, he need not go into details. Goo

00239.0 கலைஞர் மு. கருணாநிதி : தனியார்களுக்கு கொடுக்கப் படுகின்ற ஸ்பின்னிங் மில்களுக்கான லைசன்ஸ் 13 பேருக்குத் தரப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொடுக்கப்பட்ட 13 லைசன்ஸ்களும் காங்கிரஸ்காரர்களுக்கே கொடுக்கப்படுகிறது என்கின்ற குற்றச்சாட்டை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

மூன்று கோடி ரூபாய் மூலதனம் போடவேண்டிய ஒரு டயர் உற்பத்தி தொழிற்சாலைக்கான லைசன்ஸ் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான லைசன்ஸ் வாங்கியவர் இதற்கான மூலதனத்தை போட முடியாமல் இன்றைக்கு பலரிடம் மூலதனத்திற்காக அலைந்துகொண்டிருக்கிறார். தனியார் துறை என்ன வாழ்கிறது? தனியார் துறையில்தான் பெருமளவில் மூலதனம் போடக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆகவே பல பெரிய தொழில்களை அவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்று சர்க்கார் சொல்லுகிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு தனியாரிடம் லைசன்ஸ் கொடுத்து ஒன்றரை வருடம் ஆகிறது. தனக்கு முதலீடு செய்ய முடியாமல் இன்றைக்கு பல பாகங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறார். தனியார் துறையில்தான் மூலதனம் போடக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆகவேதான்