பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நடைபெற்று வருகிறது. நேற்று 17-5-1999 மாலை 4-45 மணியளவில், அக்னி tea Stall-tea stallக்குப் பெயரே அக்னி tea stall- அந்தக் கடையினுடைய மாஸ்டர் கணேசன் என்பவர் மண்ணெண்ணெய் Air Stoveல் pump செய்தபோது மண் ணண்ணெய் வெளியே வந்து Burner-ல் தீப்பிடித்துச் சூடாகும் சமயம் ஒருவர் வந்து தனக்கு டீ கேட்ட நேரத்தில், மேற்படி கணேசனுடைய கவனம் திசை திரும்பி Stove-ஐக் கவனிக்காமல் விட்டுவிட்டதால் கூடுதலான மண்ணெண்ணெய் வெளியேறி, அதனால் தீப்பிடித்து அவரது தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரையிலே அந்தத் தீ பரவி, காற்று அதிகமாக வீசிய காரணத்தால் அருகிலுள்ள கடைகளுக்கும் தீ மளமளவென்று பரவியுள்ளது என்றும், பக்கத்திலேயிருந்த சிறுசிறு கடைகளெல்லாம் தீயில் உடனடியாக எரிந்துள்ளன. பெரும்பாலும் வளையல் கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள், பழக் கடைகள், உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள்தான் எரிந்துள்ளன.

கோயில் சார்பாக 100 கடைகள்தான் ஏலம் விடப்பட் டுள்ளன. ஆனால் 300 கடைகள் எரிந்துவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. எல்லாம் தற்காலிகக் கடைகள் என்பதால், அதிக மதிப்புள்ள பொருட்கள் நாசமாகி இருக்க முடியாது என்றும் கூறப்படுகின்றது. மாவட்ட ஆட்சித் தலைவரின் மதிப்பீட்டின் படி, சுமார் 20 இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மூன்று ஆண்களும், இரண்டு பெண் களும் இறந்திருக்கின்றார்கள். மற்றொருவர் இறந்திருக்கிறார். அவர் ஆணா பெண்ணா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிய நிலையிலே அந்தச் சடலம் இருக் கின்றது. பத்திரிகையொன்றில் 15 பேர் இறந்ததாக வந்துள்ள செய்தி தவறானது என்பதை அந்தப் பத்திரிகையாளர்களே காலையில் தொலைபேசி மூலமாக என்னுடைய செயலகத்திற்குத் தெரிவித்திருக்கின்றார்கள். இந்த விபத்திலே மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். அதில் ஒருவருக்கு 50 சதவீதக் காயமும், மற்றொருவருக்கு 55 சதவீதக் காயமும், இன்னொரு வருக்கு 15 சதவீதக் காயமும், ஏற்பட்டுள்ளது. மூவரும்