பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

625

சூட்டியிருந்தார். நான்கூட ஓரிடத்தில் சொன்னேன், 'வெங்கட்ராமன்' என்றால், முழுப் பெயரைச் சொல்லாமல், ‘வெங்கட்' என்றோ, 'ராமன்' என்றோ சொல்வார்கள். அதுபோல நீங்கள் 'கடவுள் இல்லை' என்ற பெயரை வைத்துவிட்டீர்கள். இதை அரைப் பெயராகச் சொல்கிறவர்கள், 'கடவுள்' என்று அழைத்தால் என்ன செய்வீர்கள், அல்லது 'இல்லை' என்று அழைத்தால் என்ன செய்வீர்கள் என்றுகூடக் கேட்டதுண்டு. அந்த அளவுக்குத் தன்னுடைய குழந்தைக்கே 'கடவுள் இல்லை' என்ற பெயர் வைத்த அப்பழுக்கற்ற நாத்திகராக, அதே நேரத்திலே தந்தை பெரியாருடைய கொள்கையைக் கடைப்பிடிக்கின்ற சுயமரியாதை வீரராக, அண்ணாவுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்ட தளகர்த்தராக விளங்கியவர். அவர் இன்று இல்லை என்னும்பொழுது மிகவும் வேதனையடைகின்றோம்.

அன்பில் பொய்யாமொழி, என்னுடைய ஆருயிர் நண்பர் அன்பில் தர்மலிங்கம் என் கரம் பிடித்து விட்டுச்சென்ற பிள்ளை. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், நான் திருச்சி மாவட்டப் பகுதியிலே சுற்றுப்பயணத்திலே ஈடுபட்டிருந்தபொழுது, அவர் என்கூட இரவு பதினோரு மணி வரையிலும் பேசிக்கொண்டிருந்து விட்டு, விடைபெற்று வீட்டுக்குச் சென்றார். செல்லும்போதுகூட - என்னுடைய குரல் வளத்திற்காக நான் அந்தச் சுற்றுப் பயணத்திலே திராட்சைப் பழங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன் - காய்ந்த திராட்சையை. அது நான் சாப்பிட்டுத் தீர்ந்துவிட்டது. அந்தக் கிண்ணத்தைப் பார்த்து விட்டு, 'அப்பா, காலையில் நான் அந்த திராட்சையை வாங்கி வருகின்றேன்' என்று சொல்லிப் போனவர்தான்: அவர் காய்ந்த திராட்சையாக ஆகிவிட்டார். அந்தப் பிள்ளையை இழந்து நான் பட்ட பாடும், படும் பாடும் எவ்வளவு என்பதை உணர்ந்துள்ள மாண்புமிகு உறுப்பினர்கள் இங்கே அதனை எடுத்துரைத்திருக் கின்றார்கள்.

அதைப்போல என்னுடைய ஆருயிர்த் தம்பி, பண்ணுருட்டி மணி, கட்டடத் தொழிலாளியாகத் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, அந்த எளிய நிலையிலிருந்து இம்மியும் தன்னை மாற்றிக்கொள்ளாமல், பண்ணுருட்டி நகராட்சி

21-க.ச.உ.(அ.தீ.) பா-2