பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/628

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

627

ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவுக்கு இரங்கல்

உரை : 95

நாள்: 06.11.2000

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அவை முன்னவர் பேராசிரியர் அவர்களால் முன்மொழியப்பெற்று, எதிர்க்கட்சித் தலைவர் அவர்களால் வழிமொழியப்பெற்று, எல்லாக் கட்சிகளின் தலைவர்களாலும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப் பெற்றுள்ள இந்தத் தீர்மானத்தின்மீது என்னுடைய கருத்துக் களையும் இணைத்து, இந்த அவையினுடைய உணர்வுகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க உங்களோடு இணைந்து நானும் கடமைப்பட்டிருக்கின்றேன்.

மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்கள் 50 வயதுகூட நிறையப் பெறாத வயதில், 48 வயதில், இளம்பிராயத்தில் நம்மை விட்டுப் பிரிந்திருக்கின்றார். அரசியலிலே புகழ் வாய்ந்த ஒரு பெரும் குடும்பத்துச் செல்வர் அவர். அவருடைய தந்தை மோகன் குமாரமங்கலத்தை நான் நன்றாக அறிவேன். அவரோடு நன்கு பழகி இருக்கின்றேன். குறைந்த காலமேயானாலும்கூட ரங்கராஜன் குமாரங்கலம் அவர்களிடம் நிரம்பப் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவர் வெற்றிபெற்ற திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பற்றி எந்நேரமும் கவலைப்படுவதையும் அந்தத் தொகுதிக்கு தொடர்ந்து நன்மைகளைச் செய்ய வேண்டுமென்று அக்கறை காட்டுவதிலேயும் எப்படிச் சிறந்து விளங்கினார் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். தமிழகத்திற்கு நிரம்பச் செய்ய வேண்டும், வளம் சேர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றியவருடைய தொண்டு தொடர்ந்து நமக்குக் கிடைக்க முடியாமல் மறைந்துவிட்டார்.அவரை இழந்து தவிக்கின்ற அவருடைய குடும்பத்தாருக்கு, நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய ஆருயிர் இளவல் நாஞ்சிலார், தமிழக அரசினுடைய டைய வருவாய்த் துறை அமைச்சர் மாத்திரமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின், பொதுவாக திராவிட இயக்கத்தின்