628
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
மூத்த தலைவர்களிலே ஒருவராக விளங்கியவர். அவர், நாடாளுமன்றத்திலே தனிக்கொடி நாட்டியவர் என்ற அளவிற்குப் புகழ் பெற்றவர், அன்னை இந்திரா காந்தி அவர்களிடத்திலும் மற்றும் உள்ள தலைவர்களிடத்திலும் அவர் எந்த அளவிற்குப் பழகினார் என்பதும், எவ்வளவு நற்பெயரை அவர்களிடத்திலே எடுத்தார் என்பதும்,நாஞ்சில் மனோகரன் என்றால் ஒரு தனி கவனத்தோடு, தனி ஆர்வத்தோடு அவரை டில்லி வட்டாரம் கவனித்தது என்பதையும் நான் மிக நன்றாக அறிவேன்.
அமைச்சராக இப்போது மாத்திரமல்ல - நிதி அமைச்சராக அருமை நண்பர் எம்.ஜி.ஆருடைய அமைச்சரவையிலே இடம் பெற்றிருந்தபோதும், இப்போது இந்த அமைச்சரவையிலே அவர் இடம் பெற்றிருந்தபோதும், நிர்வாகப் பொறுப்புகளை எவ்வளவு நேர்மையோடு கவனித்தார். எந்த அளவிற்கு தயவுதாட்சணியம் இல்லாமல் நடந்துகொண்டார். எவ்வளவு பொறுப்புணர்வோடு நடந்துகொண்டார், என்பதையெல்லாம் நான் மிக நன்றாக அறிவேன். நான் இந்த அவைக்குத் தெரிவிக்க வேண்டுமேயானால், அமைச்சர்களிலேயே அவர் ஒருவர்தான், தான் ஆற்றுகின்ற பணிகளை ஒவ்வொரு மாதமும் குறிப்பு எடுத்து, புள்ளிவிவரத்தோடு எனக்குத் தகவலாகத் தரக்கூடியவர். அவர் வெளியூர் செல்வதாக இருந்தாலும்கூட எந்த ஊருக்குச் செல்கிறேன், எப்போது புறப்படுகிறேன் என்பதிலேயிருந்து, வந்து சேர்ந்துவிட்டால்கூட சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டேன் என்ற குறிப்பு வரையிலே எனக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கக் கூடியவர். அப்படி தன்னுடைய பணியை மிகக் கண்டிப்பாக கடமை உணர்வோடு ஆற்றிய என்னுடைய அருமை இளவலாக, அருமைத் தம்பியாக இருந்தவரை இழந்து, நீங்கள் எல்லாம் தெரிவிக்கின்ற அனுதாபம், ஆறுதல் இவற்றால் மாத்திரமே நானும் ஆறுதல் பெறுகிறேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொண்டு, அவருடைய குடும்பத்தாருக்கு இந்த அவையின் மூலமாக இரங்கலைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
ய
அன்பரசு, திராவிட இயக்கத்திலே ஒரு பகுத்தறிவாளராக தன்னைப் பதிவு செய்து கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருந்தவர். எம்.ஜி.ஆருடைய தலைமையிலே பணியாற்றியவர், தம்பி திருநாவுக்கரசு தலைமையிலே இறுதிக் காலத்திலே பணியாற்றியவர். அவர் குறைந்தகாலமே இந்தச் சட்டமன்றத்திலே கடமையைச் செய்தார் என்றாலும்கூட அதுவே அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாக, ஆற்றலுக்கு உதாரணமாகத் திகழ்வதை இந்த அவையிலே உள்ள ஒவ்வொரு