பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சி. சுப்பிரமணியம் மறைவுக்கு இரங்கல்

உரை : 96

நாள்: 08.11.2000

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதுபெரும் அரசியல் அறிஞர், பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் அவர்களுடைய மறைவுக்காக இரங்கல் தீர்மானத்தை அவை முன்னவர் பேராசிரியர் அவர்கள் முன்மொழிந்து, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழிமொழிந்து, மற்ற கட்சிகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தாருக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைய என்னுடைய மனோநிலை, உடல் நிலை, இரண்டையும் பொறுத்து இன்று அவைக்கே வர இயலுமா என்ற சூழ்நிலையிலே இருந்தேன். நேற்று இரவு 10-00 மணி முதல் நானும், அமைச்சர்களும், எங்களோடு மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களும் விடிய, விடிய காலையில் நான்கே முக்கால் மணி வரையிலே அப்பலோ மருத்துவமனையிலே இருந்து காலையிலேதான், விடியற்காலையிலேதான் வீடு திரும்பினோம். அவைக்கு வர இயலாத உடல்நிலை எனக்கு இருந்தாலும்கூட, ஒரு மகத்தான பெரியவருக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்கின்ற அந்த எண்ணம் உந்தித்தள்ள என்னுடைய கடமையை ஆற்றவேண்டும், ஒரு பெரிய மனிதருக்கு ஆற்றவேண்டிய கடமையை ஆற்றத் தவறினால் வாழ்விலே, குறிப்பாக, பொது வாழ்விலே நாம் செய்த பெரும் பிழையாகும் என்ற அந்த உணர்வோடு இந்த இரங்கல் தீர்மானத்தின் தொடர்பாக சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்

90 அகவை நிரம்பிய மகத்தான மனிதர் சி.எஸ். அவர்கள் கோவை மாவட்டத்திலே, பொள்ளாச்சிக்குஅருகிலே உள்ள ஒரு சின்னஞ்சிறு கிராமத்திலே பிறந்தவர். சிறிய கிராமத்திலே