632
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அவர்களுடைய துணையோடு இந்தியாவிலே பசுமைப்புரட்சித் திட்டத்திற்கு வித்திட்ட பெருமைக்குரிய திருமகன் மறைந்த சி.எஸ். அவர்கள் ஆவார்கள். அந்த முயற்சியின் காரணமாகத் தான் பற்றாக்குறை நிலைமையிலேயிருந்த நமது நாட்டு உணவு நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சில ஆண்டுகளில் உணவில் தன்னிறைவு அடையக்கூடிய ஒரு சூழ்நிலையை சி.எஸ். அவர்கள் உருவாக்கினார்கள். லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் மறைவுற்றதைத் தொடர்ந்து இந்திரா காந்தி அம்மையார் தலைமையிலே அமைந்த அமைச்சரவையிலும் சி.எஸ். அவர்கள் இடம் பெற்றார்கள். 1974-77 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவினுடைய நிதியமைச்சராக அவர்கள் விளங்கி, இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளிலே வங்கிகள் உருவாவதற்கு வழி வகுத்தார்கள். இன்றைக்கு கிராமப்புற வங்கிகள் எல்லாம் இருக்கின்றன என்றால், அதற்குக் காரணகர்த்தா 1974-77 வரையில் நிதியமைச்சராக அன்றைக்கு இருந்த சி.எஸ். அவர்கள்தான் என்று சொன்னால், அது மிகையாகாது. 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலே ஒரு பிளவு ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த அந்த காலகட்டத்தில் சி.எஸ். அவர்கள் அன்னை இந்திரா காந்தி அவர்களுடைய ஆதரவாளராக விளங்கினார்கள். ஆனாலும்கூட, இந்திரா காந்தி அவர்கள் Emergency - நெருக்கடி நிலை பிரகடனப்படுத்திய பிறகு அதனால் ஏற்பட்ட விளைவுகளை அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள் என்பது வரலாற்றுக் குறிப்பாகும். அதற்குப் பிறகு 1979 ஆம் ஆண்டில் சரண்சிங் தலைமையிலே அமைந்த அமைச்சரவையில் சிறிது காலம் அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் விளங்கினார்கள். அதன் பின்னர், தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்த சி.எஸ். அவர்களை 1992 ஆம் ஆண்டில் மராட்டிய மாநில ஆளுநராக இருக்க வேண்டுமென்று கேட்டு, அவ்வண்ணம் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அங்கேயும் அவர் தன்னுடைய நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சம்பவம் ஒன்று உண்டு. அப்போது பிரதமர் நரசிம்மராவ் அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலே அவர் தெரிவித்த ஒரு கருத்தின் காரணமாக, அந்தக் கருத்து வெளியானதைத் தொடர்ந்து ஆளுநர் அலுவலக மரபை நிலைநாட்டும் வகையில் பதவியிலிருந்து விலகி, சிறந்த ஜனநாயக மரபைக் காத்த அந்தப் பெருமையும் சி.எஸ். அவர்களைச் சாரும்.
அ