பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

63

நாறுகிறது என்று சொல்கிறார்கள். இப்போது எது நாறுகிறது? கார்ப்பரேஷனா அல்லது சர்க்காரா, உண்மையிலே சர்க்கார்தான் நாறுகிறது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்

இந்த நாற்றத்தை தொடர்ந்து இன்னொன்றையும் கூற விரும்புகிறேன். பல நல்ல அதிகாரிகள் கண்டுபிடித்த கள்ளக் கணக்குகளை எல்லாம் வைத்திருக்கின்ற வியாபாரிகளுக்கு அரசினர் பாதுகாப்பு வேலி அமைக்கின்ற வகையில் இன்னும் இரண்டுமாத தவணை கொடுக்கிறார்கள். இப்படி இரண்டு மாத தவணைக் கொடுத்திருந்தால் எங்கே அவர்கள் இனி கள்ளக் கணக்கை சரி செய்யாமல் வைத்திருக்கப் போகிறார்கள்? 'இன்று போய் நாளைவா' என்று ராமாயணத்தில் ராமன் ராவணனிடத்தில் கூறியதாக பார்த்தோம். ராமாயணம், பௌராணிகர்களால் எழுதப்பட்ட போதிலும், ராவணன் நேர்மையாக இருந்ததன் காரணமாக அதேபோன்று நடந்து கொண்டான், நேர்மையற்றவனாக இருந்திருந்தால், அன்று இரவே சீதையையும் அசோகவனத்திலிருந்து எடுத்துக்கொண்டு வேறு எங்காவது ஓடிப் போயிருப்பான், ராவணன் நேர்மையாக இருந்ததால் சீதைக்கும் பாதுகாப்பு கொடுத்து, அடுத்த நாள் போருக்கு வந்தான், உயிர் விட்டான். அந்தக் கதை வேறு விஷயம். ஆனால் இந்த ராவணன்கள் 'இன்று போய் நாளை வா' என்பதை வைத்துக்கொண்டு கள்ளக் கணக்கு எனும் சீதையையும் தூக்கிக்கொண்டு இரவோடு இரவாக மறைந்து விடுவார்கள் என்பதை இந்த அரசுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். இப்பேர்ப்பட்டவர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்புக் கொடுக்க முற்படலாமா என்பதை கேட்க விரும்புகிறேன்.

வேண்டியவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் பற்றி இதுவரை சொன்னேன். வேண்டாதவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்ன என்பதைப் பற்றியும் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். மதிப்பிற்குரிய முதமைச்சர் அவர்களுடைய தேர்தல் வழக்கு நடக்கும்போது முதலமைச்சர் அவர்களுக்கு எதிராக சாட்சியம் சொன்னார்கள் என்ற காரணத்திற்காக ஆவடி போலீசார் சிலரின் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை கூறுகிறேன். இவைகளை எல்லாம் முதலமைச்சர் அவர்கள்