கலைஞரின் சட்டமன்ற உரைகள்
639
காணிக்கையாக நம்மால் இயன்ற நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்து இருக்கின்றோம். அதனுடைய அடையாளமாகத்தான் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, தமிழக அரசின் சார்பிலே 5 கோடி ரூபாய் முதலிலே வழங்கப்பட்டது. இன்று மாத்திரமல்ல, நாம் பல ஆண்டு காலமாகவே, இந்தியாவிலே எந்தப் பகுதியிலே யாருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் உதவக்கூடிய அந்த மனப்பான்மையை தமிழகம் பெற்றிருக்கிறது என்பதை நான் சொல்லி யாருக்கும் புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. கார்கில் போராட்டத்திற்கு 50 கோடி ரூபாயை வழங்கியது தமிழ்நாடு. அதைப்போலவே ஒரிசா மாநிலத்திலே அண்மையிலே நிகழ்ந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வேட்டி, சேலைகளும், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பால் பவுடரும் 44 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகளும், இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அவல், வெல்லம் போன்ற பொருட்களையும் ஒரிசாவுக்கு நாம் அனுப்பினோம். அதேபாணியிலே இப்போது அனுப்புவது ஓரளவுக்கு ஒப்பிடும்போது குறைவாகக்கூட இருக்கும். மேலும் அதிகமாக அனுப்ப வேண்டும் என்கின்ற அந்த உணர்வு நம்மிடையே எழுந்துள்ளது. அந்த உணர்வின் எதிரொலியா கத்தான் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இந்த அவையிலே இப்போது தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றார்கள்.
அதனால்தான் நேற்றையதினம் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேகூட நான் குறிப்பிட்டேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவி, பொருள் உதவி ஆகிய அனைத்து உதவிகளையும் செய்ய இந்த அரசு முன்வந்துள்ளது என்றும் மேலும் தமிழக அரசின் மூலமாக நிவாரண நிதி வழங்க விரும்புவோர் 'குஜராத் நில நடுக்க நிவாரண நிதி' என்ற பெயரில் சென்னை, தலைமைச் செயலகத்திலே உள்ள பொதுத்துறைச் செயலாளர் பெயருக்கு காசோலைகளோ வங்கி வரைவோலைகளோ அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். ஏனென்றால், இவற்றையெல்லாம்