பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அமைச்சர் ஞாபகம் வருகிறது. அவருக்குக்கூட அருமைத் தம்பி ஒருவர் இருந்தார் அர்ச்சுனன் என்று, அதே கோவை மாவட்டத்தில்தான் இந்த அர்ச்சுனன் சுட்டுக் கொல்லப்பட்டார். அர்ச்சுனன் என்றால் அத என்ன சாதாரண ஜந்துவா? நாயா? நரியா? அவனும் இந்த நாட்டில் வாழப் பிறந்த பிரஜை அல்லவா? அவனுடைய மனைவி மஞ்சள் குங்குமம் இழக்க, மக்கள் கதறக் கதற, தற்காப்புக்காகச் சுட்டேன். ஆர்ப்பாட்டக் காரர்களை நோக்கிக் கூட அல்ல, தொண்டைக்குழிக்கு நேராகச் சுட்டேன் என்று போலீஸ் அதிகாரி சொல்ல, பொது விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம் இந்த மன்றத்தில், ஆனால் அது மறுக்கப்பட்டிருக்கிறது. உணவுப் பஞ்சம், மொழிப் பிரச்சினையில் பிடிவாதம், பல்வேறு நிர்வாக ஊழல்கள் இத்தனையும் சேர்ந்து இந்த அமைச்சரவை மீது நம்பிக்கை யில்லை என்ற வாதத்தை வலுப்படுத்துகின்றது.

கடைசியாக ஒன்று, 1943-44-ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தைப்பற்றி நேரு அவர்கள் அன்று குறிப்பிட்ட வாசகம் டிஸ்கவரி ஆஃப் இண்டியா என்ற புத்தகத்தில் குறிப்பிட்ட வாசகம் - அதைப் படித்தால் அமைச்சர்கள் சொல்லுகிற எல்லா வாதங்களுக்கும் பதில் இருக்கின்றன. "இயற்கையில் கொடுமையோ வேறு நிலைமைகளோ இந்தப் பஞ்சத்திற்குக் காரணமல்ல. வரும்பொருள் உணர்ந்து முன் எச்சரிக்கையுடன் செயலாற்றியிருந்தால் இதைத் தடுத்திருக்கலாம். அதிகார வர்க்கத்தின் அலட்சியமும், ஆற்றல் அற்ற தன்மையும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம். கடைசி வினாடி வரை தெருக்களில் பிணங்கள் விழுந்த பின்னரும், பற்றாக்குறை, பஞ்சம், இவை இல்லவே இல்லை என்று அரசினர் சார்பில் மறுத்தனர். நெஞ்சுருக்கும் படங்களை ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை வெளியிட்டபோது அதை அரசினர் சார்பில் மறுத்த ஒரு பிரமுகர் நிலைமையை மிகைப்படுத்தி நாடகமாடுகின்ற துரோகத் தன்மையில் பத்திரிகைகள் இறங்கிவிட்டன' என்று வர்ணித்தார் பத்திரிகைக்காரர்களைத் திட்டுகிற காங்கிரஸ் காரர்களுக்கு அப்போதே பதில் சொல்லியிருக்கிறார் பண்டிதர் நேரு. “பரவலான பஞ்சம் இருக்கிறது என்ற உண்மையை மறுக்க இயலாத நிலைவந்தபோது, மேல்மட்டத்தில் ஒருவரை ஒருவர்