பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பயன்படுத்துவது உண்டு. ஆனால், எதிர்க்கட்சிக்கு ஆளும் கட்சி கறுப்புக் கொடி காட்டுகிறது, நான் உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நான் மிகவும் உயர்வு செலுத்துகிற, அன்பு செலுத்துகிற, மதிப்பு செலுத்துகிற கைத்தறி நெசவாளர்களைப் பற்றி ஏதோ ஒன்றுச் சொன்னேன் என்று கற்பனையாகக் கயிறு திரிக்கப்பட்டு, அந்த வகையிலே எல்லா இடங்களிலும் காங்கிரஸ்காரர்கள் கறுப்புக்கொடி, காட்டினார்கள். அந்த நிகழ்ச்சிகளிலே ஒன்றாக, மதுரை மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, சின்னாளப்பட்டியிலே உள்ள காங்கிரஸ்காரர்கள் கறுப்புக் கொடி காட்டுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டார்கள். மாலை ஏழு மணிக்குக் கறுப்புக் கொடி என்றால், காலை 9 மணிக்கு திண்டுக்கல் டிராவலர்ஸ் பங்களாவில் நான் தங்கியிருந்தபோது போலீஸ் அதிகாரி லாங்கிடன் என்பவர் என்னைச் சந்தித்து, இன்று கறுப்புக் கொடி காட்டுகிறார்கள், நாங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறோம். அவர்கள் எங்களைப் பாதுகாப்பு கேட்கிறார்கள்” என்று சொன்னார்கள். அவர்களுக்கு இவர்கள் பாதுகாப்பு அளிக்கிறார்களாம். அது மாத்திரம் அல்ல என்னிடத்தில் வேண்டுகோள் விடுத்தார்; "அவர்கள் கறுப்புக் கொடி காட்டுகின்ற இடம் பார்த்து நீங்கள் வரவேண்டும்; வேறு வழியாக வந்து விடக்கூடாது” என்று அவர்கள் சொன்னார்கள். நான் அவர்களிடத்தில் சொன்னேன் “இப்படிப்பட்ட எதிர்ப்பு களையெல்லாம் சமாளித்து நாங்கள் பழக்கப்பட்டவர்கள்தான். ஆகவே, அந்த வழியாகவே வருகிறேன்” என்று சொல்லி, குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாகச் சென்றேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஆளுங்கட்சிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி காட்டுகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படவில்லை; அது அடக்கப்படவில்லை. ஒரு சமயம் முதல் அமைச்சர் அவர்கள் சொல்லலாம் -இவர்கள் 1,400 பேர்கள்; ஆகவே கைது செய்தேன். அவர்கள் 40, 50 பேர்கள் தானே? ஆகவே, கைது செய்யவில்லை என்று குறிப்பிடலாம். ஆனால், எங்களுக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இப்போதே ஆளுங்கட்சியினர் தயாராகிக் கொள்ளுகின்றார்கள் கறுப்புக் கொடி காட்ட என்பது தான். இவர்கள் ஆளும் கட்சியாக வருவார்கள்; நம் அப்போது கறுப்புக் கொடி காட்ட வேண்டும்