கலைஞரின் சட்டமன்ற உரைகள்
75
சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் நகரசபை நடந்துகொண்டி ருக்கிறது. அந்த நகரசபையில் ஒரு தீர்மானம் போட்டார்கள். நகரசபைத் தலைவர் ராமகிருஷ்ணன் படத்தை திறந்து வைப்பது என்றும், அவர் பேரிலே ஒரு மன்றத்தை ஏற்படுத்துவது என்றும் தீர்மானம் போட்டார்கள். அப்போதே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் திரு. மெய்யப்பன் என்பவர் எடுத்துக்காட்டினார்கள். அரசாங்கம் 1792 எண்ணுள்ள ஜி.ஓ. போட்டிருக்கிறது. அந்த ஜி.ஓ. 13-8-1963-இல் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. அந்த ஜி.ஓ.-ப்படிஒரு தலைவருடைய படத்தை அவருடைய காலத்திலே திறந்து வைப்பது என்பது கூடாது. ஒரு தலைவருடைய படத்தை அவருக்குப் பின்னே வருகிற தலைவர் காலத்தில் வேண்டுமானால், திறந்து வைக்கலாம் என்று எடுத்துச் சொன்னார்கள். சேர்மென் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். இப்போதைக்கு வேண்டுமானால் அவர் பெயராலே மன்றத்தை வைக்கலாம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு ஒரு திருத்தப் பிரேரணை கொடுத்தார்கள். அந்தத் திருத்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. அந்தத் திருத்தப் பிரேரணையில் லால்பகதூர் சாஸ்திரி அவர்களுடைய படத்தைத் திறந்து வைக்கலாம் என்றுதான் கோரப்பட்டது. அதைத் தோற்கடித்துவிட்டார்கள். நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். அதைத் தோற்கடித்துவிட்டு நகரசபைத் தலைவர் படத்தைத் திறந்து வைக்கவேண்டுமென்று காங்கிரஸ்காரர் தர்மலிங்கம் அவர்கள் கொடுத்திருந்த தீர்மானத்தையே மறுபடியும் எடுத்துக்கொண்டு சபையில் 19 வோட்டுகளில் வெற்றிபெறச் செய்து நிறைவேற்றியிருக்கிறார்கள். முதலிலே திராவிட முன்னேற்றக் கழகத் தோழரின் ஆட்சேபணையை சேர்மென் ஏற்றுக் கொணடார்கள். இருந்தும் மறுபடியும் நகரசபைத் தலைவரின் படத்தைத் திறந்து வைப்பது என்ற பழைய தீர்மானத்தையே எடுத்துக்கொண்டு நிறைவேற்றியிருக் கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள் யாருக்குச் சொந்த புத்தியும் இல்லை, சொற்புத்தியும் இல்லை என்று சொற்புத்தியைக்கூடக் கேட்காமல் காரியங்களைச் செய்தார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? 'இங்கு இருப்பது காங்கிரஸ் கட்சியின் நகரசபை. ஆகவே ஆபத்து வராது' என்பதைத் தவிர வேறு என்ன காரணம்?