பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நெல்லை நகரசபையினர் எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேன்ஜைக் கேட்காமல் ஒரு ஆளை நியமித்ததுதான் குற்றம். அது சரியா, இல்லையா என்கிற பிரச்சினைக்குப் போகவில்லை. அது நீதிமன்றத்தில் இருக்கிற விஷயம். ஆனால் இந்தச் செய்தி மே மாதம் 29-ம் தேதி பத்திரிகையிலே வந்தது. கும்பகோணம் நகரசபையில் எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேன்ஜைக் கேட்காமல் 32 பேர்களை நியமித்திருக் கிறார்கள். முதல் அமைச்சர் அவர்கள் சொல்லக்கூடும், 'ஒருவரை நியமித்தால்தான் குற்றம். முப்பத்திரண்டு பேர்களை நியமித்திருக்கிறார்கள். ஆகவே, அந்த நகரசபை இருக்கலாம்' என்று குறிப்பிடலாம். எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேன்ஜைக் கலக்காமல் 32 பேர்களை வேலைக்கு அமர்த்தி அதற்குப் பிறகு கமிஷனர் அவர்கள், 'நீங்கள் எல்லாம் வேலையிழக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்து, அதற்குப் பிறகு அப்பாயின்ட் மெண்ட் கமிட்டியில் வைத்து 'இனி அவர்கள் எங்கே வேலைக்குப் போக முடியும்? அவர்களுக்கு வயதாகி விட்டதுவயதானவர்களையும் கூட நியமித்திருக்கிறார்கள் - ஆகவே, இந்த நிலைமையே நீடிக்க வேண்டும்' என்பதாக அரசாங்கத்திற்கு மனு போட்டியிருக்கிறார்கள். இந்தச் செய்தியும் பத்திரிகையில் வந்திருக்கிறது.

பட்ட

அதுமாத்திரம் அல்ல. திருநெல்வேலிக்குச் சொல்லப் காரணங்கள் தூத்துக்குடியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைக்குக்கூட விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாக 98 குறிப்புகள் ஜூன் 30-ம் தேதி வைக்கப்பட்டன. அவற்றில் 48தான் சாச்சைக்கு வந்தன. அதற்கு 9 தடவை ஓட்டெடுப்பு நடந்தது, தலைவர் கட்சிக்கு 15 ஓட்டும், எதிர்கட்சிக்கு 16 ஓட்டும் கிடைத்தன. இப்படி 9 முறை தலைவர் கட்சித் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது தடவையும் தலைவர் கட்சிக்கு 15 ஓட்டுதான். எதிர்க்கட்சிக்கு 16 ஓட்டும் கிடைத்தன. அதற்குப் பிறகு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் கொண்டு வந்தத் தீர்மானத்திற்கு 16 ஓட்டும், நடத்த வேண்டுமென்ற தலைவர் கட்சிக்கு 15 ஓட்டும் கிடைத்தது. இருந்தும், போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? இரண்டு நாளைக்கு முன்பு தலைவர் இல்லை. துணைத் தலைவர் இல்லை.