பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

77

உறுப்பினர் தலைமையில் தகராறு - பாதுகாப்பட்டாபிஷேகம் வரையில் தூத்துக்குடி நகரசபையின் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்து, நெல்லைக்குப் பக்கத்தில் 3 ஆவது மைலில் இருப்பது நான் சிறை வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை, அந்தப் பாளையக்கோட்டை நகரசபை எந்த லட்சணத்தில் இருக்கிறது? அதனுடைய ஆடிட் கணக்கை எடுத்துப் பார்த்தால் தெரியும். 1963-64-வது ஆண்டுக்கான அந்த நகராட்சிக் கணக்கை ஆடிட் செய்தபோது பல ஆட்சேபங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. பயணச் செலவு முன் பணத்தில் கணக்குச் சரிசெய்யப்படாதது, 733 ரூபாய். அதில் தலைவர் மகராஜன் பிள்ளை மாத்திரம் 4-7-1962-ல் 200 ரூபாய், 14-7-1963-இல் 150 ரூபாய் கணக்குத் தரப்படவில்லை. இன்னும் நகராட்சியில் தொலைபேசி இருக்கிறது. அதைப் பொறுத்தவரையில் ஜனநாயக சோஷலிசம் சரியான முறையில் பின்பற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். பாளையங் கோட்டை நகரசபைக்குச் சொந்தமான தொலைபேசியில் நிறைய டிரங்க்கால் போடப்பட்டிருகின்றன. டிரங்க்கால் கட்டணம் ஆடிட் செய்யப்படும்வரை உரியவர்களிடமிருந்து பெறப்படவில்லை. நகர சபைச் சேர்மன் பெயரில் டிரங்க்கால் புக் செய்யப் பட்டிருக்கின்றது. பியூன் பெயரில் புக் செய்யப்பட்டிருக்கிறது. பட்லர் பெயரில் செய்யப்பட்டிருக்கிறது. மானேஜர் பெயரில் செய்யப்பட்டிருக்கிறது. அத்தனை பேர்களும் டிரங்க்கால் போட்டிருக்கிறார்கள். அது மாத்திரம் அல்ல, அந்தத் தொலைபேசி மூலம் டிரங்க்கால் போட்டதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பெயரில் இன்னும் 160 ரூபாய் பாக்கி இருப்பதாக அந்த ஆடிட் ரிப்போர்ட்டிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிற பாளைங்கோட்டை நகராட்சி மன்றம் கலைக்கப்பட்டதா? அங்கே நடப்பது காங்கிரஸ் கட்சி நகரசபை. அந்த பக்கம் இந்தக் காங்கிரஸ் அரசின் பார்வை செல்லாமல், அருப்புக்கோட்டைக்கும், நெல்லைக்கும் ஓடுவானேன் என்பதை நாம் இந்த நேரத்தில் தெரிந்துகொள்ள முடியும். இப்படி ஜனநாயகத்திற்கு முரணாக