பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நடைபெற்று வருகிற காரியங்களில் இன்னும் இரண்டு காரியங்களை இந்தத் தலைப்பில் எடுத்துச்சொல்ல நினைக்கிறேன்.

தேர்தலில் உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சினிமா ஸ்லைடு போடப்பட்டது - இவர்கள் மாட்டுச் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்பதற்கு இரண்டாயிரம் அடிக்கே படம் எடுத்தார்கள். அதில் யார் யாரை எப்படி கிண்டல் செய்யவேண்டும் என்பதாக - என்னைக்கூட ஓர் உருவகப்படுத்தி கிண்டல் செய்து படம் எடுத்தார்கள். ஆனால் ஒரு சிலைட் - அறிஞர் அண்ணாவின் உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்பதாகத் தயாரித்து திருப்பூர் சினிமாத் தியேட்டர் ஒன்றிலே ஓடியது. அந்தப் பகுதி தாசில்தார் அவசரம் அவசரமாக ஓடி, அந்த சினிமா சிலைடைப் பறிமுதல் செய்து, அந்த சினிமா சிலைடைப் போடக்கூடாது என்று தடுத்தார்கள். சினிமா சிலைடு ஒன்றுக்குத்தானா இந்தத் தடை? சென்னையிலே திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைக்க இந்திய குடியரசுத் தலைவர் வந்திருந்தார்கள். இதையொட்டி பல விழாக்களிலே அவர் பங்கெடுத்துக் கொண்டார்கள். எல்லாம் படமாக எடுக்கப்பட்டன. ஆனால் அந்த படத்திலே இந்திய குடியரசுத் தலைவர் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்த காட்சி வெட்டப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் காட்சி மாத்திரம் சினிமாப் படமாக வரவில்லை. காரணம் என்ன? சென்னை மாநகராட்சி திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைக்க ஏற்பாடு செய்திருந்தது. ஆகவே, அந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவரோடுகூட சென்னை மாநகராட்சித் தலைவர் மைனர் மோஸஸ் இருக்கிறார்கள். ஆகவே, அந்தப் படத்தைக் காட்டினால் 'குடியரசுத் தலைவருக்குப் பக்கத்தில் திராவிட முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த திரு. மோஸஸ் இருக்கிறார், பார், பார்,' என மக்கள் சுட்டிப் பேசிக்கொள்ள முடியும் என்றே விடப்பட்டிருக் கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினரை விட வேண்டும் என்பதற்காக திருவள்ளுவர் சிலையும்கூட விடப்பட்டு விட்டது. இதிலிருந்தே ஜனநாயக முறை எப்படிக் கையாளப்பட்டு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கலாம்.

நாவலர் அவர்கள் 'இந்த அரசு உணவு நிலையைச் சீராக்கவும், விவசாய வசதிகளைச் செய்து கொடுக்கவும் தவறிவிட்டது' என்ற கருத்தை இந்தச் சபைமுன் வைத்த நேரத்தில்