பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

79

அதனை மறுத்து அருமைச் சகோதரி குழந்தையம்மாள் அவர்கள் மிக ஆவேசமாகப் பேசினார்கள். 'விவசாயிகள் வசதி பெறவில்லை என்று நீலிக் கண்ணீர் வடிக்காதீர்கள். விவசாயிகள் தேர்தலில் உங்களை தலைகுனிய வைப்பார்கள்' என்று சவால் விட்டார்கள். கனம் அம்மையார் அவர்களுக்கும், இந்த மன்றத்திற்கும் கோயம்புத்தூரைச் சார்ந்த ஓர் உறுப்பினர் இதே மன்றத்தில் பேசிய பேச்சை படித்துக்காட்ட விரும்புகிறேன்.

“விவசாயப் பெருங்குடி மக்களின் கஷ்டங்களை எடுத்துச் சொன்னால் இந்தச் சபையே அனுதாபப்படும் என்று சொல்லலாம். அங்கு அதிகமான அளவில் விவசாயிகள் இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு மிக இன்றியமையாதது தண்ணீர். இவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு எந்தவிதத்தில் தண்ணீர் கிடைக்கும் என்பதை நான் சொல்லக்கூடிய நிகழ்ச்சி யிலிருந்து தெரிந்து கொள்ளலாம். காலை ஐந்து மணியிலிருந்தே பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் எல்லாம் தலையில் பானையை வைத்துக்கொண்டு குடி தண்ணீருக்காக மணிக்கணக்காகக் காத்து நிற்க வேண்டும். பல கிராமங்களில் பிப்ரவரி மாதத்தில் இருந்தே குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது குடி தண்ணீருக்கே இந்த நிலைமை என்றால், விவசாயத்திற்குத் தண்ணீர் எங்கே கிடைக்கும்.

விவசாயத்திற்கு உதவியாக பல சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பல லட்சக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி நாம் செலவு செய்து வருகிறோம். இதற்காக பல எஞ்சினியர்களை எல்லாம் வைத்திருக்கிறோம். ஆனால் வேலை எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் சில குளம் குட்டைகளை எடுத்து அதற்காக எஸ்டிமேட் போட்டு போர்ட் ஆபீசுக்கு அனுப்புகிறார்கள். இவ்விதம் அனுப்பி ஆறு மாதங்களுக்குப் பின்னால் அல்லது ஒரு வருடத்திற்குப் பின்னால் திரும்பி கோயம்புத்தூருக்கே வந்துவிடுகிறது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் எஸ்டிமேட் போடுவதும், போர்ட் ஆபீசுக்கு அனுப்புவதும், திரும்பி அனுப்பப்படுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது என்றால் எப்படி விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்