80
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
கொள்கிறேன். ஆக, ஏழு ஆண்டுகளாக இவ்விதமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறதே தவிர, வறண்ட பிரதேசமாக இருக்கக் என் பகுதிகளுக்கு எந்தவிதமான வசதியும்
கூடிய
கிடைக்கவில்லை.
அடுத்தபடியாக, எங்கள் பகுதியில் அதிகப்படியான அளவில் பருத்தி விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பருத்திச் சாகுபடியில் ஏற்படுகின்ற புழு பூச்சிகளை அடியோடு ஒழிப்பதற்காக நம்முடைய விவசாய இலாகா என்ன செய்திருக்கிறார்கள் என்பதை கேட்க விரும்புகிறேன். பருத்தியில் புழு விழுந்துவிட்டால், இதைப்பற்றி உடனே அதிகாரிகளுக்குத் தெரிவித்தவுடன் 24 மணி நேரத்திற்குள்ளாக 3 ஜீப்புகள் வருகின்றன. அதற்கு அடுத்த நாள் 2 ஜீப்புகள் வருகின்றன. கடைசியில் ஒருவருமே வரமாட்டார்கள். இதற்காகக் கொடுக்கப்படும் மருந்தை கலக்கிப் பார்க்கும்போது அதில் உள்ள 100 புழுக்களும் மேலே மிதந்து வந்துவிடுகின்றன. நாற்று விடும்போது இந்தப் புழு விழுந்துவிட்டால், இதற்காக ஒரு ஏக்கருக்கு 500 ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தவைகள் எல்லாம் வீணாகிவிடுகிறது. பின்னால் 6 மாதங்களுக்கு இதற்கான வட்டியைக்கூட கொடுக்க முடியாமல் விவசாயிகள் திணறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தச் சபையில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அடுத்தப்படியாக, விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு சொஸைடி மூலமாக பால் வாங்குகிறார்கள். அங்கே வாங்கப் படுகிற விலைக்கும் டவுனில் விற்கப்படும் விலைக்கும் பார்த்தால் 18 நயா பைசா வித்தியாசம் இருக்கிறது. விவசாயி களுடைய ரத்தத்தைப் பிழிந்து குறைந்த விலைக்கு அவர்களிடமிருந்து பாலை வாங்கிக்கொண்டுவந்து, நகரத்தில் இருக்கிறவர்களுக்காவது நல்ல பால் கிடைக்கிறதா என்றால் தண்ணீர்பால்தான் அவர்களுக்குக் கிடைக்கிறது. விவசாயிகள் சாபத்திற்கு ஆளாகக்கூடாது. இப்படிப் பேசியவர் அதே திருமதி குழந்தையம்மாள் அவர்கள்தான். இதே மன்றத்தில் 1964-லே பேசியிருக்கிறார்கள். நேற்றைய தினம் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் விவசாயிகளுக்குப் போதுமான நன்மைகள் செய்யப் படவில்லை, அவர்களுடைய குறைகள் கவனிக்கப்படவில்லை