பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

81

என்று இங்கே பேசியதும் அந்த அம்மையார் அவர்கள், அப்படிச் சொன்னால் நீங்கள் எல்லாம் எல்லாம் விவசாய விவசாய மக்கள் முன் தலைகுனிந்து நிற்கவேண்டும், அவர்கள் உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

விவசாயிகளுடைய நிலைமை எப்படியிருக்கிறது என்பதுபற்றி பொருளாதார நிபுணர் டாக்டர் லோகநாதன் அவர்கள் ராஜபாளையத்தில் 3-7-1966-ம் தேதி நடந்த வியாபாரிகள் சங்கத்தில் “நமது நாட்டில் விவசாயத் துறையிலானாலும் சரி; தொழில் வளர்ச்சித் துறையிலானாலும் சரி; தன்னிறைவுபெறும் அளவுகூட முன்னேறவில்லை" என்றும் "நாட்டிலே நிர்வாகம் சரியாக இல்லை, வருடக்கணக்கில் முடிவுபெறாத 'ஃபைல்'களும் இருக்கின்றன" என்றும் கூறியிருக்கிறார்.

தென்காசியில் காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மானம் போட்டு அனுப்பியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகமல்ல, சுதந்திராக் கட்சியல்ல, கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சியல்ல, காங்கிரஸ் கட்சியே போட்டு அனுப்பியிருக்கிறது. "தென்காசி தாலுக்காவில் மக்கள் வேலைவாய்ப்பின்றி பெரிதும் கஷ்டப் படுகிறார்கள். உணவு தானிய ரேஷன் கடைகளில் போதிய உணவு தானியமிருந்தாலும், அதை வாங்க மக்களிடம் பணவசதி இல்லை" என்ற அளவில் ஜூலை 6-ஆம் தேதி ஒரு தீர்மானம் போட்டு அனுப்பியிருக்கிறார்கள். கனம் உள்துறை அமைச்சர் சொல்லலாம், பணம் குவிந்து கிடக்கிறது; டர்லின் ஷர்ட் எல்லாம் போடுகிறார்கள், காரிலே போகிறார்கள்; கருணாநிதி காரிலே போகிறார்; அண்ணாதுரை காரிலே போகிறார்; நெடுஞ்செழியன் காரில் போகிறார்; மதியழகன் காரில் போகிறார்; பார்த்தீர்களா என்று எல்லாம் கூறுவார்கள். ஆனால் நிலைமை

எப்படியிருக்கிறது என்றால் அங்கேயிருக்கின்ற தென்காசி தாலுக்கா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ரத்தினசாமி நாடார் “உணவுதானிய ரேஷன் கடைகளில், போதிய உணவு தானிய மிருந்தாலும் அதை வாங்க மக்களிடம் பணவசதி இல்லை. பெரும்பாலோர் பட்டினி கிடக்கிறார்கள். உடனடியாக அந்தக் கிராமங்களில் கஞ்சித்தொட்டி திறந்து பசிப்பிணியைப் போக்க

4-க.ச.உ.(அ.தீ.) பா-2