பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

83

திரு. செஸ்டர் பௌல்ஸ் அமெரிக்காவில் 14 பேர்களுக்கு ஒரு விவசாயி இந்திய மக்களுக்காக வேலைசெய்துகொண்டிருக் கிறார் என்றும், கேரள மாநில அளவைப்போல் உள்ள ஒரு மாகாணம் அமெரிக்காவில் இந்தியாவுக்காக உணவு உற்பத்தி செய்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஏன் இந்த நிலைமை? மாயூரத்தில் நியாயவிலை கடைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வார்டுக்கு 5 மூட்டை வீதம் கொடுக்கப்படுகின்றது. ஒரு குடும்பத்திற்கு ஒரு லிட்டர்தான் ஒரு நாளைக்குக் கொடுக்கப் படுகிறது. அந்தக் குடும்பத்தில் நான்கு பேர்கள் இருந்தாலும் சரி, இரண்டு பேர்கள் இருந்தாலும் சரி ஒரு லிட்டர்தான் கொடுக்கப் படுகிறது. சோஷலிசம் அல்லவா? இதை வாங்கிக்கொண்டு அங்கிருக்கின்ற மக்கள் படுகின்ற அவதியை நானே கண்ணாலே கண்டேன். ஒரு வார்டுக்கு ஐந்து மூட்டைகள்தான் கொடுக்கப் படுகின்றன. அந்த வார்டு 500 பேர்களைக் கொண்ட வார்டாக இருக்கலாம், அல்லது இரட்டை மெம்பர் தொகுதியாகக்கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும் கொடுக்கப்படுவது ஐந்து மூட்டைகள்தான். ஏன் இப்படிக் குறைத்துக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் எங்களுக்கு உத்தரவு இப்படித்தான் என்று சொல்கிறார்கள். ஆனால் ஜனநாயக சோஷலிசம் செயல்படுகிறது என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

உணவு நிலை இவ்வாறு இருக்கிறது. கல்வி நிலை எவ்வாறு இருக்கிறது? மருத்துவக்கல்லூரி பற்றியெல்லாம் நண்பர்கள் எடுத்துச் கூறினார்கள். என்னுடைய தொகுதியிலே, நடந்த ஒரு நிகழ்ச்சி என் தொகுதியைச் சேர்ந்த குமாரி பீனாபால் இன்டக்ரேட்டட் எம்.பி. பி.எஸ். சேருவதற்குக் கோரி ஒரு விண்ணப்பம் செய்தார் மனு எண்:2080. 1966 ஜூனிலே விண்ணப்பம் செய்திருக்கிறார். அவர் முதல் வகுப்பிலே தேறியிருக்கின்றார். ரசாயனம் D+ இயற்கை விஞ்ஞானம் A+ பௌதீகம் B+ வாங்கியிருக்கிறார். சரபோஜி கல்லூரியிலே என்.ஸி.ஸி. மாணவி. அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இப்படிப் பலபேர்களுக்கு A+A பெற்றவர்களுக்கும்கூட கிடைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒருவர் C, C+ தான் பெற்றிருக்கிறார். பி.யூ.சி.-யில் இரண்டாம் முறையில் தேறியவர். அவருக்கு இண்டர்வ்யூகூட கொடுக்கப்பட