84
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
மாட்டாது. ஆனால், அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. அவர் பெயர் அருணாசலம். அவர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரல்ல, நாடடுக்கோட்டைச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். காரணம் அவர் பழைய எம்.பி.யின் மகன். 'நிரூபிப்பாயா? என்று கேட்பார்கள். அப்படியென்றால், ஒவ்வொரு ஆண்டும் மருந்துவப் படிப்புக்குச் சேர்க்கப்பட்டவர்களின் பட்டியலை இந்த மன்றத்திலே வையுங்கள். யார், யார், எந்தெந்தக் காரணங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், யார், யார் தேர்ந் தெடுக்கப்படவில்லை என்று பார்ப்போம். ஆகவே, அதை மாசுமறுவற்ற தன்மையிலே இந்த மன்றத்திற்கு கொடுங்கள். அதைவிட்டுவிட்டு, 'நிரூபிப்பாயா?' என்று கேட்டால் மாத்திரம் போதாது. நிரூபிப்பதற்கு எந்தவிதமான வாய்ப்பும் வசதியும் பெற்றிருக்காத எதிர்க்கட்சி என்ற காரணத்தாலே, குற்றங்கள் குற்றங்கள்தான். C+ பெற்ற மாணவனுக்குக்கூட, பி.யூ.சி.யில் முதல்முறை தோல்வியுற்று இரண்டாம் முறை தேறியவருக்குக் கூட இடம் கிடைத்திருக்கிறது என்றால் புகை இருக்கிறது. ஆகவே நெருப்பு இருக்கத்தான் செய்யும். இதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஆகவே அதிகாரங்கள் துர்விநியோகப்படுத்தப்படுகின்றன என்ற இந்தக் காரணமும் ஒரு காரணமாக
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு
அமைகின்றது.
அரசு வேறு, கட்சி வேறு, ஆனால் கட்சி நலனோடு காரியங்கள் நடத்தப்படுகின்றன. கீழ்வேளூர் என்ற ஊரில் தேர்தல்பற்றி ஒரு நோட்டீஸ் அச்சடித்து இருக்கிறார்கள். அதிலே காந்தி படம், தேசிய கொடி, இரண்டு பக்கங்களிலும் அசோகச் சக்கரம், இப்படி இருப்பதால் காங்கிரஸ் கட்சிதான் சர்க்கார் கட்சி என்று நினைத்துக்கொண்டு, சர்க்காரே வோட்டுக் கேட்கிறார்கள் என்று பயப்படுகின்ற அளவுக்கு அரசு, கட்சி என்ற வேறுபாடு இல்லாத அளவில் நிலைமைகள் ஏற்படுகின்றன.
கல்விப் பணிமனைகளில் அரசியலே நுழைதல் கூடாது என்பது முதலமைச்சர் அவர்களுடைய அருமையான வாதம் ஆகும். ஆனால் அதே சமயத்தில் முதலமைச்சர் அவர்களைக் கேட்க விரும்புகிறேன். கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜுக்கு இதுவரை காங்கிரஸ் எம்.எல்.சி.யாக இருந்த வித்வான் முத்துக்