பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

87

இருக்கவேண்டும்' என்ற அளவுக்கு உத்தரவு மாற்றப்பட்டிருக் கிறது. இவ்வாறு நிர்வாகத்தில் கட்சி தலையிடுகிறது; கட்சியின் தலைமை குறுக்கிடுகிறது. இதற்கு இன்னும் பல ஆதாரங்களைச் சொல்ல முடியும். சேலம், ஆத்தூர், அவனாசி போன்ற இடங்களில் வர்த்தக நிலையங்களில் சோதனை நடைபெற்று, இன்னும் பெரிய புள்ளிகள் தாக்கப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டவுடன் விற்பனைவரிச் சோதனையே டிநிறுத்தப் படவில்லையா? இது அதிகாரத் துஷ்பிரயோகம் அல்லவா? அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் இந்த மந்திரிசபையின் மீது நம்பிக்கை இல்லை என்பதை அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நாங்கள் மந்திரிகளின் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துக்கொள்வது ஒரு புறம் இருக்க, மந்திரிகள் ஒருவருக் கொருவர் நம்புகிறார்களா என்றால் அவர்களுக்குள்ளாகவே நம்பிக்கையின்மை இருக்கிறது. ரூபாய் நாணய மதிப்புக் குறைப்பைக் குறிப்பிட்டு கனம் திரு. பக்தவத்சலம் அவர்கள் என்ன சொன்னார்கள்? 'மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள் கிடைக்கவும், விலைவாசி ஏறுவதைத் தடுக்கவும் பயன்படும்; இதனால் மக்களுக்குப் பாதகம் ஏற்படாது' என்று மதிப்புக்குரிய முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். உடனே கனம் திரு. வெங்கட்டராமன் அவர்கள் என்ன சொன்னார்கள்? திரு. வெங்கட்டராமன் அவர்களும் ஒரு அமைச்சர்தான். ரூபாய் மதிப்பைக் குறைப்பது அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் புத்திசாலித்தனமான முடிவு அல்ல' என்று கூறியிருக்கிறார். அவர் கொஞ்சம் நாகரிகமாகப் பேசக்கூடியவர்; பெரியாரைப்போல் வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டார்; 'புத்திசாலித்தனமான முடிவு அல்ல' என்று கூறியிருக்கிறார். 'சாதகங்களைவிடப் பாதகமே அதிகம்' என்று கூறியிருக்கிறார். மந்திரிகளுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் நம்பிக்கை கிடையாது. இதே திரு. வெங்கட்டராமன் அவர்களைப்பற்றி ஒரு ஏடு தாறுமாறாக எழுதிற்று; எவ்வளவோ குற்றச்சாட்டுகளைக் கொட்டிக் காட்டிற்று, அதே ஏட்டில் ஐந்து வாரங்களுக்குப் பிறகு கனம் முதலமைச்சர் அவர்களுடைய