இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைஞரின் சட்டமன்ற உரைகள்
91
இப்படிப்பட்ட அக்கிரமங்கள் இந்தப் பதினெட்டாண்டுகள் காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. புள்ளிவிவரங்களைக் காட்டிப் பயன் இல்லை, திட்டங்களை வைத்துப்பயன் இல்லை, அணைக்கட்டுக்களை கட்டிப் பயன் இல்லை, ஏழை மக்களின் முகத்தைக் காட்டுங்கள், அதில் புன்சிரிப்பு இருக்கிறதா? ஏழைகள் சொல்கிறார்கள், அவர்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்று. அதைத்தான் நாங்கள் எதிரொலிக்கிறோம் என்று கூறி விடைபெறுகிறேன்.