பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அண்ணா அவர்கள் குறிப்பிட்டதுபோல- மின்வெட்டென சில காரியங்கள், நிகழ்ச்சிகள் நடைபெற்று விடுவதுண்டு. அதற்கு முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டு மென்று குறிப்பிடுவது ஓரளவுக்கு அரசியல் லாப நோக்கோடு குறிப்பிடப்படுகிற வாதமாகத்தான் இருக்க முடியுமே தவிர, வேறல்ல. வெண்மணிச் சம்பவம் திடுக்கிடத்தக்க, நெஞ்சை உலுக்கத்தக்க, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மனதை நோகச் செய்யக்கூடியது; மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது. அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றொணாத் துய ரடைந்தார்கள் என்பதையும், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த நானும், சட்ட அமைச்சர் மாண்புமிகு திரு. மாதவன் அவர்களும், அரிசன நலத் துறை அமைச்சர் அம்மையார் சத்தியவாணிமுத்து அவர்களும் அந்த இடத்திற்கு விரைந்து சென்றோம் என்பதையும் அனைவரும் அறிவர். அவ்வாறு நேரிடையாகச் சென்று செய்ய வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்திருக்கிறார்கள், நஷ்ட ஈடு தருவதற்கான காரியங்களை எல்லாம் செய்திருக்கிறார்கள், தொழிலாளர் தலைவர்களையெல்லாம் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். மேலும், அமைதி குலையாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் அங்கு வெகு தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டன.

வெண்மணிச் சம்பவத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாமா என்று கேட்கிற நேரத்திலேதான் நான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் நாட்டில் இருக்கும் போலீஸ் படையின் அளவு, போலீஸ் காவலர்களின் அளவு, கிராமங்களுடைய அளவு இந்த இரண்டையும் எண்ணிப்பார்க்க வேண்டும். வெண்மணி தஞ்சை மாவட்டத்தில், நாகை தாலுகாவில் கீவளூர் என்ற போலீஸ் ஸ்டேஷனுக்கு அப்பால் 41/2 மைல் தூரத்திலுள்ள ஒரு குக்கிராமம். அந்தக் கிராமத்தில் நடைபெற்றுவிட்ட நிகழ்ச்சி ஆறு மணிக்கு ஒன்றும், தொடர்ந்து எட்டு அல்லது ஒன்பது மணிக்கு ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்று அதற்குள்ளாக, போலீஸ் விரைந்து