பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 மக்களை செம்மைப் படுத்தியவர் வள்ளலார். 'வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!" என்று, வள்ளலார் தம் அனுபவத்தைப் பாடியே காட்டு கிருர். இந்த உண்மையை வித்வான்களும் புலவர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் பரிபாடல்கள், வரிப்பாடல்கள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்யப் பிரபந்தம், நாமாவளிகள், கண்ணிகள், சிந்துகள், கீதங்கள், பதங்கள், கீர்த்தனங்கள், முதலியவை இருக்கின்றன, இவற்றை வித்வான்களும் ரசிகர்களும் புறக்கணித்து வருவது மிகமிகப் பிற்போக்கான காரியம். சிறப்பாக இசையைப் பாடுகிறவர்களுக்கு, அதனல் ஆன்மீக இன்பம் ஏற்பட வேண்டும், இதுதான் உண்மையான இசைக்கு உரிய இலக்கணமாகும். இதைத்தான் திருவருட் பிரகாச வள்ளலார், 'அம்பலப்பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு' என்கிருர், "வள்ளற்பெருமான் ஒரு சர்வகலாவல்லவர், இசைக்கலை யிலும், மிகப் பெரிய மாமேதையாகத் திகழ்ந்தார். அவரு டைய சங்கீத ஞனத்தையும், பாடுந் திறத்தையும் கண்டு, அவர் காலத்தில் வாழ்ந்த சங்கீத மகாவித்வான்களெல்லாம், தங்களின் வித்யா கர்வத்தை விட்டு மெய் சிலிர்த்து வியந்து போற்றியிருக்கிருர்கள்' என்று, திரு. ச. மு. கந்தசாமிபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.