பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பொருள் குற்றமும் இல்லாமல் கம்பீரமாகப் பாடும் ஆற்றல் பெற்றவர். தம்முடைய இசை ஞானத்தையும், அனுபவத்தையும் கொண்டு திருஅருட்பா பாடல்களுக்கு ராகம், தாளங் களுடன் சிறப்பாகச் சுவரப்படுத்தி இருக்கிருர். இசைப் புல்மையில் தனித்தன்மையுடன் விளங்கும் அவர் சுவரப்படுத் தியதில் தவறு ஏற்படாதவாறு அற்புதமாக அச்சிட்டும் இருக் கிறார். இந்தப் புத்தகம் சங்கீத உலகுக்கு ஒரு பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். திருஅருட்பாவை இசையுடன் பாடி அனுபவிக்க விரும்பும் எல்லோருக்கும் இந்த நூல் பயன் படும் என்பதில் சந்தேகமில்லை. இந்த அருமையான திருஅருட்பா கீர்த்தனங்கள் இப்போது வெளிவருவது திருஅருட்பிரகாச வள்ளலாரின் அருள் என்றே கருதுகிறேன். மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு திருஅருட்பா பாடல்களைத் தேர்ந்து எடுத்த கவிஞர் திரு. கு. சா. கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கு ராக, தாளங்களுடன் சுவரப்படுத் திக் கொடுத்திருக்கும் அருட்பா இசை அரசி குருவாயூர் பொன்னம்மாள் அவர்களுக்கும் அருட்பெரும் ஜோதி ஆண்ட வரின் அருளால் எல்லா நலமும் வளமும் உண்டாகப் பிரார்த்திக்கிறேன். 31, போயசுத் தோட்டம், நா. மகாலிங்கம். சென்னை-600 086. (தலைவர், இராமலிங்கர் பணிமன்றம்)