பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாடி அவையோர்களை ரசிக்க வைப்பதென்பது கடினமான காரியம். சகோதரி குருவாயூர் பொன்னம்மாள் கர்நாடக சங்கீதக் கலையில் நிறைந்த அனுபவமும் சிறந்த ஞானமும் பெற்ற விதுஷியானபடியால் மிகவும் பொருத்தமாகவும் சிறப் பான அனுபவ ஞானம் பளிச்சிடும் வகையிலும் சாகி த்தி யங்கள் அனைத்திற்கும் அற்புதமாகவும் அபூர்வ ரர்கங்களிலும் சந்த பேத சொற்கட்டுகளுக்குத் தகுந்தவாறு தாளங்கள் அமைத்து ஸ்வரக் குறிப்புக்கள் தந்துள்ள முறை மிகவும் பாராட்டத் தக்கதாகும். இந்தப் புத்தகத்தை சங்கீத வித்வான்கள் யாவரும் மற்ற வாக்கேயக்காரர்களின் புத்தகங்களுடன் பொக்கிஷமாக வைத்துக்கொண்டு எவ்வளவு அருட்பாக்களை பாடம் செய்ய மூடியுமோ அவ்வளவு பாடம் செய்து கச்சேரிகளில் பாடி பிரச் சாரம் செய்து ரசிகர்களுக்கும் தங்களுக்கும் பூரீ இராமலிங்க ஸ்வாமிகளுடைய அருளாசியைப் பெறச் செய்ய வேண்டு மென்பது எனது பேரவா. கர்நாடக இசைக் கலைக்கும், தமிழிசை இயக்க வளர்ச் சிக்கும் பயன்படத்தக்க, இது போன்ற இன்னும் பல நூல்களை உருவாக்கித் தமிழ் உலகிற்கு வழங்கும் ஆற்றலையும்,'நிறைந்த ஆயுளையும் இவ்விரு கலைமாமணிகளுக்கும் இறைவன் அருள வேண்டுமென்று வணங்கி வேண்டி வாழ்த்துகின்றேன். கோட்டுர்புரம், டி. கே.பட்டம்மாள் சென்னை-600 085 3–4–83