பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று வரை வேறுயாரும் மேற்கொள்ளாத அரியதொரு பெரும் பணியை-தெய்வீகத் திருப்பணியை மேற்கொண்டு எங்களின் சக்திக்கேற்ப இந்நூலை உருவாக்கியுள்ளோம். இதை அடுத்து இரண்டாவது தொகுப்பாக இன்னும் ஒரு நூற்றுக்கு மேற்பட்ட உருப்படிகளைக் கொண்ட நூல் ஒன்றை வெளியிடவும் நினைத்திருக்கின்றேன். அம்முயற் சியும், வள்ளற்பெருமானின் கருணையால் நிறைவேறும் என்று நம்புகின்றேன். இந்நூலில், எமக்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித் துள்ள, இசைக்கலையின் சிகரங்களாகவும், இலக்கிய உலகின் மாமேதைகளாகவும் திகழும், சங்கீத கலாநிதி செம்மங்குடி திரு. சா. சீனிவாசய்யர், சங்கீத கலாநிதி திருமதி டி. கே. பட்டம்மாள், தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவர் சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ. சிவஞானம் அருள் மொழியரசு திருமுருக கிருபானந்தவாரியார், வள்ளல் திரு நா. மகாலிங்கம் ஆகியோருக்கு எனது இதயம் கனிந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகும். இம்மகத்தான பணியில், எனது கோபதாபங்களை யெல் லாம் சகித்துக் கொண்டு. பொறுமையுடன் இசையமைத்துக் கொடுத்த திருமதி குருவாயூரம்மையாருக்கும், சுரக்குறிப்பு எழுதும் பணிக்குத் துணைபுரிந்த திரு ஏ. ஆர். கண்ணன் அவர்களுக்கும், புத்தகப் பதிப்பிற்குப் பொருளுதவி புரிந்த இயல், இசை, நாடக மன்றத்தினருக்கும், அழகுற அச்சிட்டுக் கொடுத்த நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ்) திரு நாரா. நாச்சி யப்பன் அவர்களுக்கும் என்றும் என் நன்றி. வணக்கம் கு. சா. கிருஷ்ணமூர்த்தி 19-5-83