பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. சண்முகக் கொம்மி ாாகமாளிகை தாளம் : ஆதி (திச்சகதி) (22-வது மேளமான கரகரப்ரியா'வின் கிளை) குறவர் குடிசை நுழைந்தாண்டி-அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி துறவர் வணங்கும் புகழாண்டி-அவன் தோற்றத்தைப் பாடி அடியுங்கடி-கும்மி அடியுங்கடி மாமயிலேறி வருவாண்டி-அன்பர் வாழ்த்தவரங்கள் தருவாண்டி தீமையில்லாத புகழாண்டி-அவன் சீர்த்தியைப் பாடி யடியுங்கடி-கும்மி அடியுங்கடி | பன்னிரு தோள்கள் உடையாண்டி-கொடும் பாவிகள் தம்மை யடையாண்டி என்னிரு கண்களனையாண்டி-அவன் ஏற்றத்தைப் பாடி யடியுங்கடி-கும்மி யடிங்கடி || வேங்கை மரமாகி நின்ருண்டி - வந்த வேடர் தமையெல்லாம் வென்முண்டி தீங்குசெய் சூரனைக் கொன்ருண்டி-அந்த தீரனைப் பாடி யடியுங்கடி-கும்மி அடியுங்கடி | சீர்திகழ் தோகை மயில்மேலே-இளஞ் செஞ்சுடர் தோன்றுந் திறம் போலே கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான்-வருங் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள் | ஆறுமுகங்களில் புன்சிரிப்பும்-இரண் டாறு புயந்திகழ் அற்புதமும் வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஒர்-திரு மேனியும் பாருங்கள் வெள் வளைகான் |