பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகளில் பாடி, பல்லாயிரக் கணக் கான மக்களைப் பக்திப் பரவசத்தில் திளைக்கச் செய்து வரு கின்ருர், திருவருட்பிரகாச வள்ளலார் இறையருளில் ஒன்றிக் கலந்து உள்ளம் நெகிழ்ந்து பல்வேறு சந்தச் செறிவுகளில் அமைத்துள்ள விருத்தப் பண்களுக்கெல்லாம் கீர்த்தன வடிவம் தந்து, அவைகளுக்குப் பொருத்தமான இராகம், தாளம், சுரக் குறிப்புக்கள் தந்து, தாம் செய்யும் இசைத் தொண்டு, பின்னே வருகின்ற சந்ததிகளுக்கும் பயன்தரும் வ்கையில் "அருட்பா இசையமுதம்' என்னும் இந்த நூலை தமிழருக்கு வழங்குகின்றர். - இச் சீரிய பணிக்குச் சிறந்த உறுதுணையாக நின்று செய ல்ாற்றும் என் அன்பிற்குரிய செந்தமிழ்ச் செம்மல் கவிஞர் திரு கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களே இந்நூலின் தொகுப் பாசிரியராகப் பொறுப்பேற்று திறம்படச் செயலாற்றியிருப் பது பாராட்டத்தக்க பணியாகும். வானேரும் போற்றும் திருவருட்பாவை, ஏனேரும் ஒதி உய்வு பெறத் தேனர் இசை வழங்கும் செந்தமிழ் நாட்டு இசைக் கலைஞர்கள் அனைவரும் திசையெங்கும் தினந்தோறும் முழங்கிப் பயன் பெற எல்லாம் வல்ல முருகப் பெருமான வேண்டி வாழ்த்துகின்றேன். நேரிசை வெண்பா பூந்தன் குருவாயூர் பொன்னம்மாள் கன்னலென ஈந்த அருட்டா இசை யமுதை-காந்தமெனக் கண்டேன், களித்தேன் கனியமுதம் போல் இனிதாய் உண்டேன் உவந்தேன் உயர்ந்து. அன்பள் கிருபானந்த வாரி