பக்கம்:அருட்பெருஞ்ஜோதி.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஆகமும்‌, அடிகள்‌ எவை எவை தவிர்மின்‌ என்று எடுத்‌துரைத்தாரோ அவைகள்‌ எல்லாம்‌ விழா கொண்டாடுபவரை நோக்கி, சிரித்துவிட்டு, வீணர்‌ விழா இன்று. எமது வெற்றிவிழா என்றும்‌ உளது. இன்று அவர்கள்‌ அருட்பா படிப்பர்‌, நாளைமுதல்‌ எமதடி பணிவர்‌, இன்று இராமலிங்கரின் பக்தர்களாயினர்‌ நாளைமுதல்‌ எமது அடிமைகள்‌” என்றுரைத்து இடிக்கும்!

அந்தோ! அந்தோ! எத்தனை எத்தனை நன்னெறிகள்‌ இந்நாட்டிலே நாவாரப்‌ பேசிப்‌ பேசியே மங்கி மடித்தன! எத்துணை பெரியார்கள்‌. அடியார்கள்‌ இங்கு பூஜிக்கப்பட்டே கொல்லப்பட்டனர்‌! எந்தெந்த அருள்‌ மொழிகள்‌ புகழப்பட்டு மறைக்கப்பட்டன ஏன்‌ பிறந்தனர்‌ இந்நாட்டில்‌! ஏன்‌!