98 அருணகிரிநாதர் பாலசுப்ரமண்யரது நடன தரிசனம் சுவாமிகள் திருச் செந்துாரில் ஆண்டவரை நித்தம் தரிசித்து அருமையான பலவித சந்தங்களில் அவரைச் செந்தமிழாற் பாடி மகிழ்ந்து ஆனந்த வெள்ளத்தில் திளைத் திருக்கும் பொழுது ஒருநாள் 'தஞ்சந் தஞ்சஞ் சிறியேன் மதி கொஞ்சங் கொஞ்சத் துரையே யருள் தந்தென் றின்பந் தருவீடது தருவாயே’’ (94) என்றும் "மெய்ச் சிந்தைவர என்று நின்தெரிசனைப் படுவேனுே'(47) என்றும் இரங்கி வேண்ட, வேண்டியபோ தடியர் வேண் டிய போகமது வேண்ட வெரு துதவு பெருமாள்தமது 'மணங்கமழ் தெய்வத் திளநலங்காட்டி அருண கிரியாரின் எதிரே குழந்தைத் திருக் கோலத்துடன் கொஞ்சிக் கொஞ்சி நடன தரிசனம் தந்தார். ('செந்தி லிலும் என்றன்முன் கொஞ்சி நடனங் கொளும் கந்த வேளே (16) அவ்வழகிய நடனத்தைக் கண்ட அருன கிரியார் முருகா கடம்பும், மகுடமும், செங்கையும், வேலும், ஆறுமுகமும், பன்னிரு கண்ணும், குளிர்ந்த பேரொளியும் விளங்குவதும், தண்டை, வெண்டையம், கிண்கினி, சதங்கை, கழல், சிலம்பு என்னும் ஆறு ஆபரணங்களும் திருவடிகளிற் கணகனென்று ஒலிப்பது மான இந்த நினது குழந்தைக் கோலம்-நடன.கோலம்என் கண்குளிர (எந்த வேளையும்) சந்தித்தல் வேண்டும்: என உள்ளம் நெகிழ்ந்து வேண்டினர். (தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தன்கழல் சிலம்புடன் கொஞ்சவே * கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்சமலர் செங் கையும் சிந்துவேலும் கண்களும் முகங்களும் சந்திர நிறங் களும் கண்குளிர என்றன் முன் சந்தியாவோ ! (16)) வில்லிபுத்துாரரொடு வாது இங்ங்னம் சுவாமிகள் திருச்செந்துாரிற் பத்தித் துறை யிழிந்து ஆனந்தவாரி படிந்திருந்த சமயத்தில்-மிகப்பிர சித்தி பெற்றவரும், பெரும் புலமை வாய்ந்தவரும், தம்
பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/117
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
