பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அருணகிரிநாதர் டினவாறு சீர்பாத வகுப்பாதி பாடி ஆனந்த நிலையில் எமது திருக்கரத்தும் எமது தாயின் திருக்கரத்தும் இருந்து களி கூருக என ஆசி கூறினர். அங்ங்னமே அருணகிரிக் கிளியும் உண்ணுமுலைத் தாயின் திருக்கரத்தே தங்கி ‘தேவேந் திர சங்க வகுப்பைப் பாடியும், திருத்தணிகேசர் திருக் கரத்தே தங்கி அவர் களிகூரச் சீர்பாத வகுப்பு, வேல் வகுப்பு முதலியன பாடியும் பேரின்பந் திளைத்து விளை யாடிற்று, இங்ங்ணம் பூரீ அருணகிரி நாதரின் சரித்திரம் முருகபிரானது ஒர் ஒப்பற்ற திருவிளையாடலாகத் திகழ்ந்து இன்றும் பொலிகின்ற தென்க. —: О :— 2. நூலாராய்ச்சிப் பகுதி திருப்புகழின் மொத்தப் பாடல் தொகை பதிருையி ரம் என்பர், (i) எம் அருணகிரி நாதர் ஒது பதிருையிரம் திருப்புகழ் அமுதுமே-விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ். (ii) அருணகிரி நாத னறைந்தபதி ருை யிர கவிதை யென்றுலகில் யாரும்-உரை புகலும் தெய்வத் திருப்புகழ்' தணிகையுலா (iii) முத்தித் திருவென்னும் முன்பதினு ருயிரமாம் பத்தித் திருப்புகழைப் பாடுங்காண்' தணிகையுலா (iv) அருணகிரி நாதர்பதி ருையிரமென் றுரைசெய் திருப்புகழை யோதீர்- தனிப்பாடல் "புகலியில் வித்தகர்' (சம்பந்தர்) போல-அமிர்த கவித் தொடை பாட அருள்வாயே (242) எனச் சுவாமிகள் கேட்ட வாறு பூநீசம்பந்தர் பதிருையிரம் பாடல் பாடியவாறே அருண கிரியாரும் பதிருையிரம் பாடல் பாடினர். சம்பந்தர் தேவார மும் அருணகிரியார் திருப்புகழும் இரண்டும் அமிர்த கவி களே. திருப்புகழ் அமுதுமே என்ருர் மார்க்க சகாயதேவர்.