பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரநுபூதி) 17s." பிரான் திருவருளால் உலகில் நிலைபெற வேண்டும். எங். கனம் சிவபிரானுக்குரிய நூல்களிற் பத்தாந் திருமுறை யாகிய திருமந்திரம் சிறந்து நிற்கின்றதோ அங்ங்னம் குகவேளுக்குரிய நூல்களிற் பத்தாந் திருமுறையான மந்த்ர நூலாகிய கந்தரநுபூதி சிறந்து விளங்குகின்றது . எங்ங்னம் திருமூல நாயனர் ஆயன் உடலிற் புகுந்த பின்பு திருமந்திரம் பரடினரோ அங்ங்ணம் அருணகிரியார் கிளியின் உடலிற் புகுந்த பின்பு கந்தரநுபூதி பாடினர். சுவாமிகள் கிளியான பின்பு அந்தக் கிளி பாடினது கந்தரநுபூதி யென்பது பெரியோர் கொள்கை. கந்தரநுபூதி சொன்ன கிளி...நீ பிடிக்க எய்துமோ என்பது இலஞ்சி முருகன் உலா (கண்ணி 205) ஆல்ை பொருள் வழி ஆயுமிடத்துக் கந்த ரலங்காரத்தைப் பற்றிக் கூறியது போலக் கந்தரது பூதியும் சுவாமிகள் அப்போதைக் கப்போது தமக்கிருந்த மன நிலைக்கும் பத்தி நிலைக்கும் ஞான நிலைக்கும் ஒத்தவாறு தனித்தனிப் பாடிய பாடல்களின் தொகுதியாகும் எனத் தோன்றுகிறது. கந்த ரநுபூதியைப் பொருள்வழி ஆயு' மிடத்து அதிலுள்ள பாடல்கள் தவங் கிடந்த நிலையிற் பாடப் பட்டன. சில; தவங்கிடந்தும் சாந்தி பெருது கலக்க முற்ற நிலையிற் பாடப்பட்டன. சில: பேறு பெற்று ஞான நிலையிற். பாடப்பட்டன. சில: உலகுக்கு உபதேசமாகப் பாடின சிலஎனப் பகுக்கக் கூடியனவாய் உள்ளன. அவைதாம் : (i) தவங்கிடந்த நிலையிற் பாடினவை (13): 1, 2, 3, 6, 15, 18, 21, 36, 37, 40, 47, 48, 51. (ii) சாந்தி பெருது கலக்கமுற்ற நிலையிற் பாடினவை (22); 4, 5, 9, 10, 16, 19, 23–27, 29, 31–35, 39, 41, 45, 46, 50. = (iii) பேறு பெற்ற ஞான நிலையிற் பாடினவை (13): 8,. 11—13, 20, 22, 28, 30, 38, 42—44, 49. (iv) உபதேசப் பாடல்கள் (நெஞ்சுக்கும் உலகுக்கும். உபதேசம்) (3): 7, 14, 17. மேலும், திருத்துருத்தி என்னும் தலத்தில் இறைவன் தனது அநுபூதின்யப் ப்ர்டுக என்று கட்டளையிட்ட பின்