பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 அருணகிரிநாதர் ஈதல் என்னும் அறத்தைக் கரவாது புரிந்து வருவீர்களா யின், உண்மைப் பொருள் தானே விளங்கும். அப்பொருள் விளக்கமுற விளக்கமுற அதனினின்றும் உண்மை யின்பம் புலப்படும். அவ்வின்பம் பெருகப் பெருக நான் என்னும் ஒன்று நைந்துபோம்; இருவினை மும்மலம், நாற்கரணம், ஐம்புலச் சேட்டைகள் ஆதிய இவை யெலாம் ஒடுங்கும். அவை ஒடுங்கப் பூதமுங் கரணங்களும் நான் போய் ஒடுங்க அடங்கலும் மாய்ந்தால் விளங்கும் தொன்ருகிய மெய்வீடு கிடைக்கும்-என்னும் அரிய தத்வோபதேசத்தை நமது அருணகிரியார் தமது திருப்புகழாதிய நூல்களால் விளங் கக் காட்டி யுள்ளனர். 14 அருணகிரியாரின் குளுதிசயங்கள் அருணகிரி நாதரது நிலையையும் குளுதிசயங்களையும் பற்றி ஒருவகையாக ஆய்ந்து கூறுவாம். (1) நன்றியறிதல் : சுவாமிகள் மிக்க நன்றி யறிவு உள்ளவர். காமச் சேற்றிற் கிடந்த தம்மை முருகர் கை தூக்கிக் கரை காட்டினரே என்ற நன்றி யறிவு இவர் பாடல்களில் நன்கு பொலிகின்றது. முருக னடியார்களுட் சிறந்தவர் பலரும் அருணகிரியார் காம வலையிற் படஇல்லை; அடியார்களின் நற்கதிக்காக-மாணிக்கவாசகர் முதலான பெரியோர்கள் பாடினவாறு, ஆசையிற் கொடிதான பெண் ளுசையை உலகோர் விலக்குவதற்காக உபசாரமாகப் பெண்கள் வலையிற் பட்டேன் எனத் தாமுங் கூறினரே ஒழிய வேறில்லை என்பர். ஆல்ை அருணகிரியார் கூறும் மொழிகளைப் பார்க்கும் பொழுது 1. கபடிகள் இடையினும் நடையினும் யான் மயக்கமாய் க்ருவழிபணு தடத்து...மோகூடிம தருளிய கழல் (திருப்.344) 2. மடவார் பால் பூனும் மருளற...ஈடேற்று தலால் உன் வலிமையை மறவேன் (திருப். 360) 3. காமுக னகப்பட்ட ஆசையை மறப்பித்து கால்கள் ட கிாப். 426)