பக்கம்:அருமையான துணை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : அருமையான துணை ஆனுல் அப்படி நடிக்கவந்தவள் உச்சகட்டத்தில், திடி ரென தன்னைத்தானே இருட்டடிப்பு செய்துகொண்டது ஏன்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்ற சந்தேகம் எனக்கு. இதுபற்றி அந்தக் காலத்தில் தெளிவு பிறக்க வழி இருந்த தில்லை. இப்போது நல்ல தருணம், அவளிடமே கேட்டு விடலாமே என்று குதித்தது என் மனம், மறுநாள் நாங்கள் அவள் வீட்டுக்குச் சென்றபோது காமாட்சி பூஜையை முடித்துவிட்டு, ஏதோ பக்திக் கதையைப் படித்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் சிதம்பரம் சொன்னது சரிதான், என என் மனம் ஆமோதித் தது. புனிதவதியாகத் திகழ்ந்த அவள் முகத்தில் அமைதி யும் திருப்தியும் நிறைந்த ஒரு பொலிவு ஒளிர்ந்தது. எங்களை வரவேற்று பாயில் உட்காரும்படி உபசரித்தாள். உள்ளே சென்று என்னவோ உத்திரவிட்டு வந்தாள். காப்பி தயாரித்து எடுத்து வரும்படி ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக் கிருள் என்பது, சிறிது நேரத்தில் சுடச்சுட காப்பியைக் கொண்டுவந்து ஒரு சிறு பெண் தந்ததிலிருந்து புரிந்தது. நண்பர் என்னைப்பற்றிச் சொன்னர், உற்சாகத்தோடு அதிகமாகவே அளந்தார் என்றே சொல்லவேண்டும். நாடகங்கள், பழங்கால நாடக சபைகள், நடிகர்கள்பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம், அப்போது கள்ளபார்ட் காத்தலிங்கம்பற்றி இவர் வியந்து பாராட்டினர். நாடக மேடையில் அவர் ஆட்சி செலுத்திய அற்புதம் பற்றிப் புகழ்ந்தார். உங்களைப்பற்றியும் சொன்னர். உடனேதான் நீங்கள இங்கேயே இருப்பதாகத் தெரிவித்தேன். அதிலிருந்து உங்களைப் பார்த்துப் பேசவேண்டுமே என்ற ஒரே அவா தான் இவருக்கு!’ என்று கூறிஞர். அவர் பேச்சில் நான் தடி வெட்டிப் போட விரும்ப வில்லை. அது அவள் தலையில் வைத்த சரியான ஐஸ்" என்றே எனக்குப்பட்டது. அது நன்முக வேலை செய்யவும் செய்தது. அவங்கமாதிரி ஆளு யாரு இந்தக் காலத்திலே இருக் காங்க? கள்ளபார்ட்டிலே அவுக ராசா ஆச்சுதே! என்ருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/101&oldid=738658" இலிருந்து மீள்விக்கப்பட்டது