பக்கம்:அருமையான துணை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘盛 அருமையான துணை சொன்னுக, கரக ஆட்டம் எதுக்கு? இதையும் நாடக மேடை யிலே இழுத்துவிடலாமே இன்னுக. அது விளையாட்டுக்குச் சொன்ன வார்த்தைன்னு நெனச்சேன். ஆனால், மறு வருஷயே அவுக வந்து, என்ன காமாட்சி, நாடகத்திலே ஆக்ட் பண்ண வாறியா? உன்ன ஏ ஒன் கள்ளபார்ட்காரி ஆக்கி விடுறேன்.கை. அப்படியே செய்யவும் செய்தாக." அவள் பூர்வ கதையை நினைவுகூர்ந்தபோது, காத்தலிங் கத்திடம் அவள் கொண்டிருந்த நன்றியும், பக்தியும் மேலோங்கி நின்றன. - மனமோகன சபா கலந்துவிட்டதும், காத்தலிங்கம் என்ன ஆளுச்? என்று எனது வெகுநாளையக் கவலையை வெளிப்படுத்தினேன். . "கம்பெனி இல்லாமல் போனதும், அவுகளுக்கு என்னமோ போல ஆயிட்டுது. மனசே முறிஞ்சு போச்சுன்னு தோணிச்சு வாழ்க்கையே அஸ்தமிச்சுப் போனதாக நினைச்சிட்டாக, எங்கே போறது? என்னையும் அழைத்துக்கொண்டு, மலையடி வாரக் கிராமம் ஒன்றிலே போய், நிம்மதியாக இருக்க முயன்று.க. ரொம்ப நாள் ஒடலே, வயசும் ஆச்சு, மனசு விட்டுட்டுது. நாடக வாழ்க்கையிலே ஈடுபட்டிருந்த காலத் திலே வளர்ந்த குடிப்பழக்கம் உடம்பை கெடுத்திருந்தது. ஒாேத சீக்கு, கொஞ்ச காலத்திலே செத்து தெய்வம் ஆயிட்டாக, அதுக்கப்புறம் தான் இந்த ஊரோட்வே வந்திட்டேன். அதற்கு முந்தி அவள் ஏன் நாடக வாழ்க்கையை , புகழின் உச்சநிலையில் இருந்தபோது திடுமென வெறுத்து ஒதுக்கினுள் என்று கேட்டுவிடவேண்டும் என்று துடித்தது என் மனம். ஆணுல், அப்படிக் கேட்டால் அவள் பதில் சொல்வாளோ மாட்டாளோ என்ற தயக்கமும் இருந்தது. "நீங்கள் கள்ளபார்ட் வேஷத்திலே நடித்ததை கலெக்டர் துரை பார்த்துவிட்டு, மேடை மீது வந்து பாராட்டிஞரே அன்றுதான் நான் நாடகம் பார்க்க வந்திருந்தேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/103&oldid=738660" இலிருந்து மீள்விக்கப்பட்டது