பக்கம்:அருமையான துணை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளபார்ட்காரி 每雷 அதை எல்லாம் பார்த்து அவுக பெருமையும் சந்தோஷமும் படுவாகயின்னுதான் நான் முதல்லே எண்ணியிருந்தேன். ஆளு. அது அப்படியில்லை என்று சீக்கிரமே புரிஞ்சுகிட்டேன். குருவுக்கு மிஞ்சின சீடப்புள்ளே ஆயிட்டியேன்னு அவுக அடித்து சொல்ல ஆரம்பிச்சாக, ஒருநாள், எனக்கு ஏகப்பட்ட அப்ளாசும் பாராட்டும் கிடைச்சுது, அன்று நாடகம் முடிஞ்சதும், அவுசு சொன்னக உலகம் அப்படித்தான் இருக்கு. தி ற ைம க் கு எவன் மதிப்பு கொடுக்கான்? கண்ணுக்குக் குளுமையா வயசுப் பொண்ணு வந்து தின்னு, குதிச்சா, ஈயின்னு இளிச்சிடுதானுக. தேன் குடிச்ச நரி ஆயிடுதானுக எல்லாரும்! ... இது எனக்கு வேதனை தந்தது. என்ருலும் நான் ஒண்ணும் பேசலே. "கலெக்டர் துரை பாராட்டி சர்ட்டிபிகேட்டும் அனுப்பி வச்சதும், இனிமே உனக்கு என்ன ஜமீன்தார்களும் பணக் காரங்களும் பாராட்டுவாங்க : இந்தக் கிழவன் தயவு உனக்கு எதுக்கு என்று குத்தலாகச் சொன்னுக, வழக்கமான மனக் கசப்பு மட்டும் இல்லே அதிலே. பொருமை தலைதுாக்கி நின்னுது. உடனே நான் சொன்னேன்-பேரும் புகழும் பணமும் பெறலாம்கிற ஆசையோடு நான் ஆக்ட் பண்ண வரலே. உங்களுக்குத் திருப்தியும் பெருமையும் நன்மையும் ஏற்படுங்கிறதனவே தான் நான் நடித்துவாறேன். ஆகு, உங்களுக்கு அது சந்தோஷம் தரலே, மனவருத்தம்தான் உண்டாக்குதுயின்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனுலே இனி மேல் நான் மேடை ஏறப்போவது கிடையாது. இன்று நடந்ததுதான் கடைசி ஆட்டம், இது சத்தியம் என்று கையடித்தேன். அவுக இதை எதிர்பார்க்கலே. அதிர்ந்து போளுக. அப்புறம் அவுக எவ்வளவோ சொன்னுக, கெஞ்சிக் கேட்டாக. ஊகூங், என்னலே முடியாது என்று உறுதியாய் இருந்துவிட்டேன். எனக்கு அவுக மேலே வருத்தமே கிடை யாது. பக்தியும் மரியாதையுமே என்றைக்கும் உண்டு’ என்று கூறி முடித்தாள். அவள் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை என்ருலும், அவள் செயலின் அடிப்படை காதல்தான் என்று புரிந்தது. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/106&oldid=738663" இலிருந்து மீள்விக்கப்பட்டது