பக்கம்:அருமையான துணை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பயம்

105

இது விஷயமாக மேலத் தெருக்காரர்களிடம் பேசிய போது, 'இது சும்மா ஓடிவரும். அவ்வளவுதான். குரைக்கிற நாய் கடிக்காது!’ என்று தைரியம் சொன்னர்கள்.

"பழமொழி நமக்குத் தெரிகிறது. நாய்க்குத் தெரியுமா?" என்றான் செந்தி. அவன் பேச்சை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள மனமில்லாதவர்கள் 'பெரிய அகராதி! ஹெட் வெயிட் இவன் நாயிடம் ஏதாவது சேட்டை பண்ணியிருப்பான். அதனால்தான் அந்த நாய் இவனைக் கண்டால் விரட்டுது' என்று முணுமுணுத்தார்கள்.

'ஒடுகிறவனைக் கண்டால் விரட்டுகிறவனுக்கு உற்சாகம். நம்மைக் கண்டு இவன் பயப்படுகிறான் என்று நாய்க்குத் தெரிந்துவிட்டது. நாய் அறிவுள்ள பிராணி. இதுமாதிரி விஷயங்களை அது எளிதில் உணர்ந்துவிடும். அதனாலே அது இவனை ஒட ஓட விரட்டுது. அதுக்கு ஜாலி. சில நாய்கள் பயந்து ஒடுகிற மாட்டையும் கழுதையையும் விரட்டி விரட்டித் துரத்துமே அப்படித்தான் இந்த நாயும் விளையாடுது' என்று ஒருவர் அபிப்பிராயப்பட்டார்.

நாய்க்கு அது விளையாட்டாக இருக்கலாம். செந்திக்கு பயத்தை அதிகப்படுத்தி, அமைதியை இழக்கச் செய்யும் விளை ஆகத்தான் அது தோன்றியது.

நண்பர் ஒருவர் செந்தி வீட்டுக்கு அவ்வப்போது வருவது உண்டு. அவரோடு அவர் வளர்க்கும் சிறு நாயும் வரும். குட்டி என்ற நிலையைக் கடந்த, ஆயினும் முற்றிலும் பெரி தாகிவிடாத, அந்த நாய் முதலில் மோந்து பார்க்கும். பிறகு சுற்றிச் சுற்றி வரும். அதற்கு குஷி பிறந்துவிடும். மேலே விழுந்து, பொய்க்கடி கடித்து, துள்ளும்.

அப்படி அச் சிறு நாய் விளையாடுகிறபோது செந்தியின் மனம் பதைபதைக்கும். அவன் நெற்றியில் வேர்வை துளிர்க்கும். 'சவத்துப்பயல் நாய், கடித்துப்போடும் போலிருக்கே. பல்லைப் பாரு. ஊச்சி ஊச்சியாய்' என்று அவன் மனம் அச்சக் குரல் கொடுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/114&oldid=1306723" இலிருந்து மீள்விக்கப்பட்டது