பக்கம்:அருமையான துணை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அருமையான துணை


நண்பர் சிரித்தபடி சொல்லுவார்; 'சும்மா அது விளையாடுது. எல்லாரிடமும் இப்படித்தான் பழகும். கடிக்காது. கடிக்கிற மாதிரி பொய்க்கடி கடித்து விளையாடுறதிலே அதுக்கு ஜாலி!'

அது பொய்க்கடி என்று கண்டதா; நிஜக்கடி என்று கண்டதா? இப்படிக் கடித்துக் கடித்து நிஜமாகவே ஒருநாள் பற்களை ஆழமாய் அழுத்தமாய்ப் பதித்துவிடும் என்று செந்தியின் மனம் புலம்பும். ஆயினும் அவன் அதை வெளியே சொல்லமாட்டான், 'இவனுக்கெல்லாம் என்னத்துக்கு நாயி?' என்று மனசுக்குள் சலித்துக்கொள்வான் செந்தி.

விழிப்புநிலையில் மட்டுமின்றி, தூக்கத்திலும் நாய்கள் செந்தியைப் பாடாய்ப் படுத்தி, பம்பரமாய் ஆட்டிவைத்தன. பயங்கரமான நாய் தன்னை துரத்திக் கடிக்க வருவது போலவும், வெறி நாய் காலைக் கவ்வி சதையைக் கடித்துக் குத்துவது போலவும்,ஓநாய் போன்ற தோற்றமுடைய தடித்தடி நாய்கள் சைக்கிளில் செல்லும் அவனை விரட்டி வேட்டையாடிச் சூழ்ந்துகொண்டு குரைத்து நெருங்குவது போலவும், இன்னும் பலவிதமாகவும் அவன் கனவுகள் கண்டான். ஒவ்வொரு கனவும் நிஜமாகவே நிகழ்வதுபோல் துயில் நிலையில் அவனுக்குப் படும். அவ்வேளையில் அவன் அனுபவிக்கும் பய உணர்வு அவனை அலறவைத்து விழித் தெழும்படி செய்துவிடும். வேர்க்கும் உடல் உதறலெடுக்க அவன் எழுந்து குறுகுறு என்று உட்கார்ந்திருப்பான்.

ஏதாவது ஒரு நாய் பயங்கரமாகப் பாய்ந்து என்றாவது ஒரு நாள் தன்னைக் கடித்துவிடும்; நாய்க் கடி ரொம்ப மோசமானது; அதனால் அவன் மிகுந்த வேதனை அனுபவிக்க நேரிடும் என்று அந் நேரங்களில் எண்ணிக் குழம்புவான்.

செந்தியின் மனமே அவனுக்கு மோசமான துணையாக இருந்தது.

அன்று அவனுக்கு 'மனசே சரியில்லை' தெளிவற்ற ஒரு கலவரம் அவன் உள்ளத்தில் காலையிலிருந்தே நிறைந்து நின்றது. அந்த ஊரில் வெறிபிடித்த நாய் ஒன்று வடக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/115&oldid=1306722" இலிருந்து மீள்விக்கப்பட்டது