பக்கம்:அருமையான துணை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

選登感 அருமையான துனே செந்தியின் வாயும் 'சீ' என்றது. உடனேயே, நாம் இப்படிச் சொல்லியிருக்க வேண்டாமே என்று அவன் மனம் கீச்சிட்டது. நாய், உள்ளேயிருந்து ஆள் கத்தியதனுலோ அல்லது எதேச்சையாகவோ, திண்ணையிலிருந்து குதித்துத் தெருவுக்கு ஒடி பந்தது. அதே சமயத்தில் அந்த இடத்துக்கு வந்திருந்த செந்தி, தான் சீ என்று சொன்னதால் நாய் வெகுண்டு தன்னக் கடிக்க ஓடிவருகிறது என்று எண்ணிவிட்டான். அவன் பயம் அதிகரித்தது. . அவ் வீட்டின் வெளி விளக்கு சிந்திக்கொண்டிருந்த மங்கல் ஒளியில் நாயின் கண்கள் கோபக் கொள்ளிகள் போலவும், அதன் கூரிய பற்கள் சதையில் கவ்விக் குதறத் தயாராகிவிட்ட .ெ வறு ப் பு ச் சூரிக்கத்திகள் போலவும் அவனுக்குப் பட்டன. அவன் உடல் நடுங்கி படபடத்தது. ன் "ஐயோ அம்மா செத்தேன்! தாய் கடிக்க வருதே!" என்று பயங்கரமாகக் கதறிக்கொண்டு ஒடத் தொடங்கினுன். அவன் ஒடவும் தாய் கோரமாகக் குரைத்தபடி மூர்க்க மாப் அவனத் தொடர்ந்து ஓடியது. மனித ஒலமும் நாயின் வெறித்தனமான குரைப்பும், கதவை அடைத்துக்கொண்டு வீடுகளினுள் இருந்த தெருக் காரர்களே வெளியே இழுத்தன. அங்குமிங்குமாகக் கதவுகள் திறக்கப்படும் ஒசை எழுந்து கூச்சலில் கலந்தன. ஓடாதேயுமய்யா. ஒடினல் நாய் துரத்திக்கிட்டே வரும் , நில்லு ஏ. செந்தி , அந்த இடத்திலேயே நில்லு" பயப்படாமல் மெதுவாப் போங்க... இப்படிப் பலவான உபதேசங்கள் வெடித்துச் சிதறின. தன் மனபயம் புடதியைப் பிடித்துத் தள்ள, கடிக்க வரும் நாயின் பிடியில் சிக்கிவிடாமல் வேகம் வேகமாய் ஒடிப் போய், தன் வீட்டை அடைந்து, பத்திரமாய் கதவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/117&oldid=738675" இலிருந்து மீள்விக்கப்பட்டது