பக்கம்:அருமையான துணை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盔巫红 அருமையான துனே புற்துப் போயிருந்த பெரியவருக்கு இச்சிறு குழந்தையின் துணிச்சலான சுபாவம் புதுமையாக இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு அவர் முகத்தில் புன்னதை ரேகையிட்டது. அப்படியா ரொம்ட சந்தோஷம். இங்கே எங்கே வந்தே?' என்ருர், "இந்த வீட்டிலே ரொம்பப் பெரிய ஆளு ஒருத்தரு இருக்காரு, அங்கே போய்க் குரங்குத்தனம் எதுவும் பன்னி வைக்காதேன்னு அம்மா அடிக்கடி சொல்லுவா. ஆமா, ரொம்பப் பெரிய ஆளுதான்னு அப்பாவும் சொன்னு, இன்ஞெரு மாமாவும் சொன்னுங்க. இந்தத் தெருவிலேயே பெரிய வீடு இது. இதிலே இருக்கிற பெரிய ஆளு எப்படி இருக்கும்னு பார்க்க எனக்கு ரொம். ஆசை. அதுதான் வந்தேன். உனக்குத் தெரியுமா? அந்தப் பெரிய ஆளு எங்கே இருக்கு? தயங்காமல் பேசிளுள் உஷா. துடிப்பான குழந்தைதான் என எண்ணிய புன்னவனம் சிரித்தார். என்னைப் பார்த் தால் உனக்கு எப்படித் தோணுது? நான்தான் அந்தப் பெரிய ஆளுன்னு...' அதற்குள் அவள் கத்தினுள்: 'பொய்யி. . .பொய் - - ’g گمایی و تیم هم میر با சொல்லுறிே!. . . அப்போது அவள் கண்கள் குறுகி ஒளி வீசியதும், முகம் சிரிப்பால் அழகு பெற்றதும் வசீகரமாக இருந்தன. "நான் ஏன் பொய் சொல்லப்போறேன்!” என்று இயல் பான குரலில் அவர் பேசினர். அவருக்குக் கோபம் வர வில்லை. ஒரு விளையாட்டை ரசித்து, அதில் தானும் கலந்து கொள்ளும் ஈடுபாடுதான் உண்டாயிற்று. "சும்மா சொல்லுறே பெரிய ஆளு உன்னை மாதிரியா இருக்கும்! நீ தாத்தா கணக்கா இருக்கி:ே என்ருள் உஷா. wa. பெரிய ஆளு எப்படி இருக்கும் பின்னே?’ என்று புன்னே வனம் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/123&oldid=738682" இலிருந்து மீள்விக்கப்பட்டது