பக்கம்:அருமையான துணை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அருமையான துணை வைக்கும் இளம் சூரியன் போலுமிருந்தது. அம் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சந்தோஷம்தான். உஷா புத்திசாலிக் குழந்தை. அழகான அச்சிறுமியை அவள் அம்மா காலையிலேயே குளிப்பாட்டி, எளிமையான, எனினும் வனப்பும் வசீகரமும் நிறைந்த, ஆடை அணிவித்து, தலைவாரி முடித்து, சுத்தமாக விளங்கும்படி செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஆகவே அதைப் பார்ப்பது கண்ணுக்குக் குளுமையாகத்தானிருந்தது. புன்னவனம் அக்குழந்தையின் மகிழ்ச்சியை அதிகப் படுத்தலாமே என்று நினைத்தார். அவருக்கும் பொழுது போனது போலவும் இருக்குமே! எனவே, தாமரைப்பூ, கிளி, தென்னைமரம் என்று படங்கள் வரைந்து, வர்ணம் தீட்டி, உஷாவிடம் கொடுத்தார். வியப்பினுல் அவள் கண்கள் விரிந்தன. ஆனந்தத்தால் முகம் ஒளிர்ந்தது. ஐயா, பூ! பச்சைக்கிளி ரொம்ப ஜோராயிருக்குதே நீயா போட்டே?” என்று ஆச்சர்யமாய்க் கேட்டாள். ஊம் என்று சொன்ன பெரியவர், அந்தக் குழந்தைக் காக, அவள் கண்முன்னலேயே, மேலும் சில சித்திரங்கள் தீட்டினர். சந்தோஷம் சந்தோஷத்தை வளர்த்தது. இரண்டு பேருக்குமே சந்தோஷம்தான். உஷா பேராசைப்படும் குழந்தை அல்ல. பெருந்தீனி விரும்புவதுமில்லை. வரும்போதே வீட்டில் உணவு உண்டு வரும். சாப்பிட்டாச்சா?’ என்று விசாரித்தால், ஊம். சாப்பிட்டாச்சு என்று திருப்தியோடு சொல்லும். என்ன சாப்பிட்டேன் என்று தெரிவிக்கும்.

இட்டிலி சாப்பிடுறியா? உப்புமா தின்னேன்! பாதித் தோசை?’ என்று சமயத்துக்குத் தக்கபடி அவர் கேட்பார். உஷா தலையை அசைத்து, வேண்டாம். நான்தான் வீட்டிலே சாப்பிட்டாச்சே!” என்று உறுதியாக மறுத்து விடுவாள். இந்தக் குணம் புன்னைவனத்துக்கு மிகுதியும் பிடித் திருந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/127&oldid=738686" இலிருந்து மீள்விக்கப்பட்டது